Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'டிஸ்டிங்ஷன்' பஞ்சாபை அழகாக வீழ்த்தியது 'லாஸ்ட் பெஞ்ச்' மும்பை!

மும்பை: வெற்றிக் களிப்புடன் வலம் வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாபை வாங்கடே மைதானத்தில் வைத்து போங்கடே என்று தோல்வியைக் கொடுத்து விரட்டியுள்ளது இதுவரை ஒரு வெற்றியும் பெறாமல் விரக்தியில் இருந்து வந்த மும்பை இந்தியன்ஸ்.

பஞ்சாப் பந்து வீச்சாளர்களின் திமிர்ப் பேச்சு, வம்பு ஆகியவற்றைத் தாண்டி மகா பொறுமையாகவும், நிதானமாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும் சேஸ் செய்து சிறப்பான முதல் வெற்றியை சொந்த ஊரில் வைத்துப் பெற்றனர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.

5 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாபை, மும்பை வீழ்த்தியது. இந்தத் தொடரில் மும்பை பெறும் முதல் வெற்றி இதுதான். அதேசமயம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இதுதான் முதல் தோல்வியாகும்.

கடைசி ஓவரில் வெற்றி

கடைசி ஓவரில் வெற்றி

கடைசி ஓவரில் வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கைத் தொட்டது. போலார்ட் வெற்றி ரன்னை அடித்தார் - ஒரு ஃபோர் மூலம்.

ரோஹித் அருமை

ரோஹித் அருமை

கேப்டன் ரோஹித் சர்மா அருமையாகவும், பொறுமையாகவும் ஆடினார். 39 ரன்களை அவர் சேர்த்தார். கோரி ஆண்டர்சனுடன் சேர்ந்து 50 ரன்களையும் திரட்டினார்.

30 பந்துகள்.. 51 ரன்கள்...

30 பந்துகள்.. 51 ரன்கள்...

கடைசி 5 ஓவர்களில் 51 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது மும்பை. அதை திறமையாக சமாளித்து வெற்றிக் கோட்டை அவர்கள் எட்டினர்.

பொறுமையாக ஆடிய கெளதம் சிதம்பரம்

பொறுமையாக ஆடிய கெளதம் சிதம்பரம்

மும்பை அணியின் வெற்றியில் இன்னொரு முக்கிய பங்காளர் இளம் வீரர் கெளதம் சிதம்பரம். இவரை பஞ்சாப் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா ரொம்பவே சீண்டிப் பார்த்தார். நின்று திட்டினார். முறைத்தார். கோபம் காட்டினார். ஆனால் கெளதம் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. கடைசி வரை பொறுமையாக ஆடிய அவர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிக்ஸ் மழை..

சிக்ஸ் மழை..

அதேபோல அனுபவம் இல்லாத கெளதம், அனுபவம் வாய்ந்த வீரர்களைப் போல அழகான சிக்ஸர்களையும் பறக்க விட்டதால், பஞ்சாப் பந்து வீச்சாளர்கள் நொந்து போய் விட்டனர்.

தொடக்கத்தில் சறுக்கல்

தொடக்கத்தில் சறுக்கல்

மும்பை இந்தியன்ஸின் சேஸிங் ஆரம்பத்தில் சறுக்கலாக இருந்தது. அம்பட்டி ராயுடு, பென் டங்க் ஆகியோர் சீக்கிரமே அவுட்டாகி விட்டனர். அந்த விக்கெட் சரிவை கெளதம் சிதம்பரம் சற்று தடுத்து நிறுத்தினார்.

மேக்ஸ்வெல் - சாஹா

மேக்ஸ்வெல் - சாஹா

முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது பேட்டிங்கின்போது 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களைக் குவித்தது. விருத்திமான் சாஹாவும், கிளன் மேக்ஸ்வெல்லும் சிறப்பாக ஆடினர்.

சாஹாவுக்கு 3வது அரை சதம்

சாஹாவுக்கு 3வது அரை சதம்

சாஹா நேற்று தனது 3வது அரை சதத்தை எட்டினார். அதை ஒரு சிக்ஸர் மூலம் அவர் எடுத்தார்.

மேக்ஸ்வெல் 45

மேக்ஸ்வெல் 45

அதிரடி வீரர் மேக்ஸ்வெல் நேற்று 45 ரன்களை எடுத்தார். அவரை 50 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதால் மும்பை வீரர்கள் பெரும் நெருக்கடியிலிருந்து மீண்டனர்.

வாங்கடேவில் மும்பை சாதனை

வாங்கடேவில் மும்பை சாதனை

வாங்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆடியுள்ள 8 போட்டிகளிலும் இதற்கு முன்பு வென்றிருந்தது. நேற்று அதன் வெற்றி நடையை தொடர்ந்தது.

மொத்தத்தில் இதுவரை தொடர்ந்து தோல்விப் பாதையிலேயே நடந்து வந்த மும்பை இந்தியன்ஸ் நேற்று பர்ஸ்ட ரேங்க் மாணவனை தோற்கடித்த லாஸ்ட் பெஞ்ச் மாணவனின் மன நிலையில் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Sunday, May 4, 2014, 10:45 [IST]
Other articles published on May 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+