For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7வது ஐபிஎல்: நாளை முதல் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடக்கம்

By Mathi

மும்பை: 7வது ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 16-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. அபுதாபி, துபை, ஷார்ஜா ஆகிய இடங்களில் மொத்தம் 20 போட்டிகள் ஏப்ரல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

IPL 7: Online sale of tickets begin on April 3

தற்போது லோக்சபா தேர்தல் காலம் என்பதால் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துவிட்டதால் வெளிநாட்டில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

அனேகமாக மே 1-ந் தேதி முதல் 2ம் கட்ட ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது. ஜூன் 1-ந் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.

www.iplt20.com

www.ticketmaster.ae.

ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. 10-ந் தேதி முதல் விளையாட்டு மைதாங்களில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Story first published: Wednesday, April 2, 2014, 17:20 [IST]
Other articles published on Apr 2, 2014
English summary
With less than two weeks for the first ball of IPL 7 to be bowled, the online sale of tickets will begin tomorrow (April 3).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X