For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேக்ஸ்வெல்லிடம் வீழ்ந்ததை மும்பையிடம் சரிக்கட்டுமா சென்னை...?

மும்பை: கிளன் மேக்ஸ்வெல்லின் ரன் ரயாட்டில் சிக்கி கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் வீழ்ந்த சோகத்தின் வடு கூட இன்னும் மறையாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மும்பை இந்தியன்ஸை, மும்பையில் வைத்து சந்திக்கிறது.

மும்பையில் தோல்வியை சந்திக்காத அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழும் நிலையில் பஞ்சாபிடம் பெற்ற தோல்வியை மும்பையை வென்று சரிக்கட்டும் மும்முரத்தில் சென்னை இன்று களம் இறங்கவுள்ளது.

நடப்புச் சாம்பியனான மும்பை, 2 முறை சாம்பியனான சென்னையை இன்று சந்திக்கும்போது மும்பை ராசியை உறுதிப்படுத்த கண்டிப்பாக அனைத்து வழியிலும் முயலும் என்பதில் சந்தேகம் இல்லை.

6 வெற்றி 2 தோல்வியுடன் சென்னை

6 வெற்றி 2 தோல்வியுடன் சென்னை

6 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதே சமயம், 5 தோல்வி மற்றும் 2 வெற்றிகளுடன் மும்பை களம் காண்கிறது.

மும்பையில் வைத்து பஞ்சாப் - பெங்களூருக்கு ஆப்பு

மும்பையில் வைத்து பஞ்சாப் - பெங்களூருக்கு ஆப்பு

மும்பை அணி அமீரகத்தில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து ஐந்திலும் மண்ணைக் கவ்வி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் மும்பை திரும்பிய பின்னர் சொந்த மண்ணில் வைத்து அதுவரை தோல்வியே அடையாமல் இருந்த பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அடுத்தடுத்து தோற்கடித்து தெம்பாக உட்கார்ந்துள்ளது.

2 முறை அதே பஞ்சாபிடம் தோற்ற சென்னை

2 முறை அதே பஞ்சாபிடம் தோற்ற சென்னை

சென்னை அணியோ கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் முதல் தோல்வியைச் சந்தித்தது. பின்னர் இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் அதே பஞ்சாபிடம் 2வது முறையாகவும் தோல்வியைத் தழுவியது.

மும்பை தோத்தா கஷ்டம்

மும்பை தோத்தா கஷ்டம்

இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக மும்பை வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. இனிமேல் அது ஒரு தோல்வியைச் சந்தித்தால் கூட சாம்பியன் பட்டத்தைத் தக்க வைக்க முடியாத நிலை ஏற்படலாம் என்ற அபாயகரமான கட்டத்தில் மும்பை உள்ளது.

சர்மா- போலார்ட் சவால்

சர்மா- போலார்ட் சவால்

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கீரன் போலார்ட் ஆகியோர்தான் சென்னைக்கு முக்கிய சவாலாக இருப்பார்கள். அதேபோல அம்பட்டி ராயுடு, கோரி ஆண்டர்சன் ஆகியோரும் முக்கிய வீரர்கள் ஆவர்.

ஸ்மித் - மெக்கல்லம் நின்றால் போதும்

ஸ்மித் - மெக்கல்லம் நின்றால் போதும்

அதேசமயம், சென்னை அணிக்கு வேயன் ஸ்மித்தும், மெக்கல்லமும் சேர்ந்து நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் போதும், பின்னால் வரும் ரெய்னா, டோணி ஆகியோர் பிரமாதப்படுத்தி விடுவார்கள்.

பழைய பேராண்டி ஸ்மித்

பழைய பேராண்டி ஸ்மித்

மும்பை அணியில் முன்பு விளையாடியவர்தான் ஸ்மித். எனவே அவருக்கு மும்பை மைதானத்தில் ஆடுவது சாதமாகவே இருக்கும். அது சென்னைக்கும் போனஸ் பலனைக் கொடுக்கலாம்.

பந்து வீச்சில் சம பலம்

பந்து வீச்சில் சம பலம்

மும்பை அணியில் லசித் மலிங்கா நல்ல பார்மில் உள்ளார். ஆனால் சென்னையின் மோஹித் சர்மா அதை விட சிறப்பான பார்மில் உள்ளார்.

பிராவோ இல்லாதது கஷ்டமே...

பிராவோ இல்லாதது கஷ்டமே...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் எல்லாமே சிறப்பாக உள்ளது. ஆனால் வேயன் பிராவோ இல்லாதது அந்த அணிக்கு உண்மையிலேயே சற்று நஷ்டம்தான்.

Story first published: Saturday, May 10, 2014, 16:14 [IST]
Other articles published on May 10, 2014
English summary
Their campaign back on track after tasting five successive losses in the UAE, defending champions Mumbai Indians will now face two-time title winners Chennai Super Kings in a potentially explosive no-holds-barred contest at the Wankhede Stadium here on Saturday. The two arch-rivals are poised to go toe-to-toe in front of a packed crowd in the night game that is more crucial for the hosts and Champions League holders than their southern rivals who are sitting pretty at no. 2 on the points table with six wins from eight games.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+