Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடவே ஆரம்பிக்கலை.. அதுக்குள்ளேயும் பிளாக்கில் விற்பனையான ஐபிஎல் டிக்கெட்

அபுதாபி: 7வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் விற்பனையாகி வருகிறதாம்.

அபுதாபியில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன.

இப்போட்டிக்கான டிக்கெட் ஏற்கனவே விற்று விட்ட நிலையில் தற்போது பிளாக்கில் இதை விற்று வருகிறார்கள். ஒரிஜினல் டிக்கெட் விலையை விட 20 மடங்கு அதிகமாக அதாவது ரூ. 24,000க்கு பிளாக்கில் விற்கிறார்களாம்.

ஏப்ரல் 16ம் தேதி

ஏப்ரல் 16ம் தேதி

தொடக்கப் போட்டி ஏப்ரல் 16ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவும் இதில் மோதுகின்றன.

1500 திர்ஹாம்

1500 திர்ஹாம்

இதற்கான டிக்கெட் விஸை 80 திர்ஹாம்தான். அதாவது ரூ. 1280தான். ஆனால் பிளாக்கில் சிலர் இதை ரூ. 24,000 வரை விற்கிறார்களாம்.

சைட்டிலேயே விளம்பரம்

சைட்டிலேயே விளம்பரம்

இந்த பிளாக் டிக்கெட் விற்பனையை பிரபலமான இணையதளத்தின் மூலமாகவே நடத்துகின்றனர் என்பதுதான் கொடுமையானது.

கால் மணி நேரத்தில் 15 பேர்

கால் மணி நேரத்தில் 15 பேர்

ராபின் என்பவர்தான் இந்த பிளாக் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இவர் கூறுகையில் விளம்பரம் வெளியான கால் மணி நேரத்திலேயே 15 பேர் கேட்டு விட்டதாக கூறுகிறார்.

முதல் 2 போட்டிகளுக்கு டிக்கெட் இல்லை

முதல் 2 போட்டிகளுக்கு டிக்கெட் இல்லை

அதேசமயம், அபுதாபியில் நடைபெறும் முதல் இரண்டு போட்டிகளுக்கும் டிக்கெட் ஏற்கனவே விற்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸில் 20 போட்டிகள்

எமிரேட்ஸில் 20 போட்டிகள்

இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் 20 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துகிறது இந்திய கிரிக்கெட் வாரியம். முதல் கட்டமாக ஏப்ரல் 16 முதல் 30ம் தேதிவரை அங்கு நடைபெறும். 2வது கட்டமாக மே 2ம் தேதி முதல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும்.

Story first published: Friday, April 11, 2014, 15:28 [IST]
Other articles published on Apr 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+