யுவராஜுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் மதிப்புண்டு: சொல்கிறார் கவாஸ்கர்
டெல்லி: ரூ. 16 கோடிக்கு யுவராஜ் சிங்கை டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியிருப்பதை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வரவேற்றுள்ளார்.
யுவராஜ் சிங் மிகச் சிறந்த வீரர். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சேவை மிகப் பெரியது.
எனவே இந்த விலையானது சரியானது, நியாயமானதே என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

யுவராஜ் விலை 16 கோடி:
நேற்று நடந்த 8வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது ஐபிஎல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி யுவராஜ் சிங்கை ரூபாய் 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதுகுறித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறப்பான வீரர்:
" யுவராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். அவரது கடந்து வந்த பாதையைப் பாருங்கள். மிகச் சிறப்பான வீரர் அவர்.

உலகக் கோப்பை தொடர் நாயகன்:
2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது அவர் தான் தொடர் நாயகன். பின்னர் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பிறகு மீண்டு வந்தார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் மிகச் சிறந்த சேவையை ஆற்றியுள்ளார்.

திறமை மேல் நம்பிக்கை:
அவருக்கு தற்போது 32 வயதாகிறது. அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்.

ரசிகர்களால் நிரப்புவார்:
யுவராஜ் சிங் தனது ஆட்டத்தின் மூலம் டெல்லி மைதானத்தை ரசிகர்களால் நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம். அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்பார்ப்போம்" என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

போன முறை 14 கோடி:
யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஏலத்தின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் ரூபாய் 14 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த தொடரில் யுவராஜ் சரியாக ஆடவில்லை.

பெங்களூரு போய் டெல்லி வந்துச்சு:
இதனால் பெங்களூர் அணி அவரை கழற்றி விட்டு விட்டது. இதையடுத்து தற்போது அவரை டெல்லி வாங்கி விட்டது. அதுவும் மிகப் பெரிய சாதனை விலைக்கு.


Click it and Unblock the Notifications