Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குஜராத் லயன்ஸ்.. இதுதாங்க ரெய்னா கேப்டனாக கலக்கப் போகும் புது டீம் பெயர்!

டெல்லி: சுரேஷ் ரெய்னாவை குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்ந்துள்ள இரண்டு அணிகளில் ஒன்றுதான் இந்த குஜராத் லயன்ஸ்.

இன்னொரு அணி ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ். அதன் கேப்டனாக ஏற்கனவே டோணி அறிவிக்கப்பட்டுள்ளார். இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஸ்டார்களாக ஜொலித்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

ராஜ்கோட்டை தளமாக கொண்டு இந்த குஜராத் லயன்ஸ் அணி செயல்படும். ராஜ்கோட் நகருக்குத்தான் ஐபிஎல்லில் புதிய அணியாக அனுமதி கிடைத்துள்ளது. இருப்பினும் அதன் பெயர் குஜராத் லயன்ஸ் என்று சூட்டப்பட்டுள்ளது.

மாநிலப் பெயருடன் வரும் முதல் அணி

மாநிலப் பெயருடன் வரும் முதல் அணி

ஐபிஎல் அணிகள் அனைத்துமே அந்தந்த நகரின் பெயர்களைத் தாங்கியே உள்ளன. ஆனால் ராஜ்கோட் மட்டுமே குஜராத் லயன்ஸ் என்று மாநிலத்தின் பெயரைத் தாங்கி வருகிறது.

கேப்டன் ரெய்னா

கேப்டன் ரெய்னா

இந்த அணியின் கேப்டனாக அனைவரும் எதிர்பார்த்தது போல சுரேஷ் ரெய்னா அறிவிக்கப்பட்டுள்ளார். அணியின் பயிற்சியாளராக பிராட் ஹாட்ஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சவுராஷ்டிரா ஜடேஜா

சவுராஷ்டிரா ஜடேஜா

ராஜ்கோட் அணி ரெய்னாவை ரூ. 12.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம். இந்த அணியில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளார். இவர் குஜராத்தைச் சேர்ந்தவர்.

ஜடேஜா ரேட் ரூ 9.5 கோடி

ஜடேஜா ரேட் ரூ 9.5 கோடி

ரவீந்திர ஜடேஜா, சவுராஷ்டிரா பகுதியைச் சேர்ந்தவர். இவரை ரூ. 9.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது ராஜ்கோட் அணி.

டிவிட்டர் பேஸ்புக்கிலும்

டிவிட்டர் பேஸ்புக்கிலும்

இந்த அணியின் டிவிட்டர் முகவரியும் (@TheGujaratLions), பேஸ்புக் முகவரியும் (facebook.com/TheGujaratLions) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அணியின் லோகோவையும் வெளியிட்டுள்ளனர்.

Story first published: Wednesday, February 3, 2016, 11:50 [IST]
Other articles published on Feb 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+