சிஎஸ்கேவை விட்டு வெளியேற நினைத்த ஜடேஜா.. உண்மையை உடைத்த முன்னாள் வீரர்..அப்படி என்ன பிரச்சினை?
சென்னை: சிஎஸ்கே அணியை விட்டு ஜடேஜா வெளியேற நினைத்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில், தோனி கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். தோனியே தன்னிச்சையாக எடுத்த முடிவு தான் என்று தகவல் வெளியானது.

விலக நினைத்தார்
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகரான ஆகாஷ் சோப்ரா பெரிய குண்டு ஒன்றை தூக்கி போட்டுள்ளார். தோனி தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சிஎஸ்கே கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் ஜடேஜா , அணியை விட்டு விலகி இருப்பார். ஆனால் அவர் அதனை செய்யாமல் சிஎஸ்கே அணியிலேயே தொடர்ந்தார்.

சொந்த ஊர்
அதற்கு காரணம் தோனியின் வழிகாட்டுதல் தான். ஐபிஎல் தொடரில் குஜராத் அணி களத்துக்கு வந்த போது, அது அவர் சொந்த ஊர் என்பதால், அந்த அணிக்கு மாறலாம் என்ற திட்டத்தில் ஜடேஜா இருந்தார். தற்போது மற்ற கேப்டன்களை போல் ஜடேஜாவும் கேப்டன் பொறுப்பை கற்று கொள்ள கொஞ்சம் நேரம் ஆகலாம்.

கூடுதல் சம்பளம் ஏன்?
ஆனால் ஜடேஜாவுக்கு எந்த சிக்கலும் இல்லை. களத்தில் தோனி இருப்பதால் பிரச்சினை இருக்காது அவர் எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன் என்று கூறினார். ஆகாஷ் சோப்ராவின் இந்த வீடியோ மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் வீரர்கள் தக்கவைக்கும் நிகழ்வின் போது ஜடேஜாவுக்கு 16 கோடியும், தோனிக்கு 12 கோடியும் தரப்பட்டது.

தோனியின் தியாகம்
அதற்கு உண்மையான காரணம், ஜடேஜா சிஎஸ்கே அணியை விட்டு விலக நினைத்ததாகவும், அதற்கு ஒப்புதல் வழங்காத தோனி, ஜடேஜாவுக்கு கூடுதல் சம்பளத்தை வழங்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறிவிட்டு, தாம் சம்பளத்தில் குறைத்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும், ஜடேஜாவை சமாதானப்படுத்தும் முயற்சியாக தான் அவருக்கு கேப்டன் பதவியும் தரப்பட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications