Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றில் ஆல் டைம் சிறந்த கேப்டன் பிளேயிங் லெவன் அணி!

மும்பை : ஐபிஎல் மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைத்து கொள்வது என்பது குறித்து தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பல அணிகளின் கேப்டன்கள் மாற வாய்ப்பு இருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 70 வீரர்கள் கேப்டன் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த சூழலில் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த ஆல் டைம் பிளேயிங் லெவன் கேப்டன் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

cricket ipl

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் கௌதம் கம்பீர். கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார். இதனால் இந்த பட்டியலில் அவர் தொடக்க வீரராக இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார்.

அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று தந்த ரோகித் சர்மா களமிறங்குவதால் இடது கை, வலது கை காம்பினேஷன் கிடைக்கிறது என்பது கூடுதல் அம்சம். இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பவர் விராட் கோலி. ஆர் சி பி அணியின் கேப்டனாக பல ஆண்டுகள் செயல்பட்டு இருக்கிறார். ஆர் சி பி அணி அவருடைய தலைமையில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும் அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆகவே தலைவனாகவும் சிறந்த விளங்கியிருக்கிறார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். ஸ்ரேயாஸ் தலைமையில் டெல்லி அணி இறுதிப் போட்டி வரை ஐபிஎல் தொடரில் வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் ஆல் டைம் கேப்டன் பட்டியலில் நிச்சயம் இடம் உண்டு.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக இருந்து ஐந்து முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார். இதனால் அவருக்கு இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை ஹர்திக் பாண்டியா இருப்பார். ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக இருந்து ஒருமுறை சாம்பியன் பட்டமும் மறுமுறை இறுதிப்போட்டி வரையும் அழைத்து சென்றிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்,பந்துவீச்சு காரணமாக,இந்த அணியின் இடத்தை வழங்கி இருக்கிறது. ஏழாவது இடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான ஜடேஜா இருக்கிறார். ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு காரணமாக அவர் இந்த அணியில் இடம் கிடைத்திருக்கிறார்.

இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ. பிராவோ மும்பை அணியின் கேப்டனாக ஒரு போட்டியில் விளையாடியதை அடுத்து இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னாள் கேப்டனும், மறைந்த ஆஸ்திரேலிய வீரருமான் ஷான் வார்னே.

இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜாஹிர் கான் இருக்கிறார். ஜாகிர் கான் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டதை எடுத்து இந்த பட்டியில் இடம் பிடித்திருக்கிறார். இந்த பட்டியலில் 11வது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ். சன்ரைசர்ஸ் அணியில் கேப்டனாக பேட் கம்மின்ஸ் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அந்த அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றது மட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் கலக்கிருப்பதால் அவருக்கு இந்த அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

Story first published: Sunday, September 8, 2024, 11:01 [IST]
Other articles published on Sep 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+