மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடிய பிராப்சிம்ரன் சிங், தற்போது தனது ஆல் டைம் கிரேட் ஐபிஎல் லைவ் அறிவித்திருக்கின்றார். ஐபிஎல் தொடரில் 51 போட்டிகளில் விளையாடியுள்ள பிராப்சிம்ரன் 135 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் ஒரு சதம், ஏழு அரை சதம் அடங்கும்.
இந்த நிலையில் ஐபிஎல் ஆல் டைம் கிரேட் அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் சேவாக்கை அவர் தேர்வு செய்துள்ளார். இருவருமே பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று நம்பர் மூன்றாம் இடத்தில் விராட் கோலியை அவர் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக போல் இருக்கின்றார். இதேபோன்று நம்பர் நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவை தேர்வு செய்துள்ள பிராப்சிம்ரன் சிங், ஐந்தாவது இடத்தில் தென்னாபிரிக்க ஜாம்பவான் டிவில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார்.இதன் அடுத்து ஆறாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்துள்ளார்.
இதுபோன்று ஏழாவது வீரராக சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் தோனியை அவர் தேர்வு செய்துள்ளார். இதேபோன்று ஏழாவது வீரராக மும்பை அணியின் ஆல்ரவுண்டராக இருந்த பொலார்ட் தேர்வு செய்துள்ளார்.எட்டாவது இடத்தில் பும்ராவை, பிராப்சிம்ரன் தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் பும்ரா 145 போட்டியில் விளையாடி 183 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஒன்பதாவது இடத்தில் மல்லிங்கா தேர்வு செய்துள்ள அவர் பத்தாவது இடத்தில் சாஹலை தேர்வு செய்துள்ளார். இந்த நிலையில் ஆல் டைம் 11 என்று சொல்லிவிட்டு அவர் 10 வீரர்கள் தான் தேர்வு செய்திருப்பதாக ரோகித் சர்மா மற்றும் ரெய்னாவின் ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். ரோகித், ரெய்னா ஆகிய இரண்டு பேரில் ஒருவரையாவது சேர்த்து இருந்தால் கூட 11 வீரர் வந்திருக்கும் என்றும் அவர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.