For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சரியான திட்டம் போட்டு.. "பழைய" டீமின் அஸ்திவாரத்தையே அசைத்த அஸ்வின்.. கடைசியில் இப்படியா ஆகணும்!

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு காலத்தில் கிங்களில் ஒருவராக இருந்த அஸ்வின் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இன்று இவர் பஞ்சாப்பிற்கு எதிராக செய்த ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்தார்.

Recommended Video

IPL 2020: Ashwin picks 2 wickets, then walk off injured

ஐபிஎல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த மும்பை - சென்னை போட்டி பல்வேறு திருப்பங்களுடன் முடிந்தது.

இந்த போட்டியில் சென்னை அணி வென்று, மும்பையை பழி வாங்கியது. ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்கு இடையே நடந்து வருகிறது.

மோசம்

மோசம்

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி மோசமாக திணறியது. ஆனால் கடைசி கட்டத்தில் ஸ்டோனிஸ் காட்டிய அதிரடி காரணமாக, 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய பஞ்சாப் அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து மோசமாக திணறியது.

அஸ்வின் டெல்லி

அஸ்வின் டெல்லி

இந்த போட்டியில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். இந்த தொடரில் அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாடினார். இரண்டு வருடமாக பஞ்சாப் அணிக்காக இவர் விளையாடினார். பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தவர் இந்த முறை டெல்லி அணிக்கு மாறினார். பஞ்சாப் அணி இவரின் கேப்டன்சி கீழ் பெரிய அளவில் மாயலாஜம் எதையும் நிகழ்த்தவில்லை.

அணி மாற்றம்

அணி மாற்றம்

2018 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் நன்றாக விளையாடியது. ஆனால் 2019ல் பெரிய அளவில் பஞ்சாப் சோபிக்கவில்லை. அஸ்வின் பவுலிங் மட்டுமே கொஞ்சம் நன்றாக இருந்தது. இந்த நிலையில்தான் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டார். இதனால் அஸ்வின் டெல்லிக்கு சென்றார்.

பேட்டிங் எப்படி

பேட்டிங் எப்படி

அஸ்வின் இன்றைய போட்டியில் பேட்டிங்கில் பெரிய அளவில் எடுபடவில்லை. முக்கியமாக இவர் ஆட வேண்டிய நேரத்தில் பந்துகளை குடித்தார். ஆனால் பவுலிங்கில் கலக்கினார். அஸ்வின் வீசிய 6வது ஓவர் போட்டியின் திருப்பு முனையாக இருந்தது. அந்த ஓவரில் வரிசையாக கருண் நாயர் மற்றும் நிக்கோலஸ் பூரான் என்று இரண்டு முக்கியமான வீரர்களின் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார்.

திட்டம்

திட்டம்

இவர்கள் எல்லோரும் அஸ்வினின் முன்னாள் அணி வீரர்கள். பஞ்சாப்பில் இவர்களுக்கு கேப்டனாக அஸ்வின் இருந்தார். இதனால் பஞ்சாப்பில் எல்லோரும் எப்படி விளையாடுவார்கள் என்று அஸ்வின் கரைத்து குடித்து இருந்தார். இதனால் அவர்களுக்கு ஏற்றபடி, அஸ்வின் பீல்டிங் செட் செய்தார். எப்படி போட்டால் யார் விக்கெட்டை இழப்பார் என்று அஸ்வினுக்கு தெரியும்.

விக்கெட்

விக்கெட்

அஸ்வினுக்கு இந்த ஓவரில் கேப்டன் ஷ்ரேயேஸ் ஐயர் முழு சுதந்திரம் கொடுத்து இருந்தார். இதனால் அஸ்வினும் அதிரடியாக பீல்டிங் செட் செய்து சுதந்திரமாக பவுலிங் செய்தார். அவரின் திட்டம் சரியாக கை கொடுத்தது. திட்டமிட்டது போல ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்தார். கீப்பர் பண்ட் மட்டுமே கேட்ச் விடாமல் இருந்திருந்தால் மூன்று விக்கெட் கூட விழுந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் கடைசி

ஆனால் கடைசி

இப்படி திட்டமிட்டு அஸ்வின், பஞ்சாப்பின் அஸ்திவாரத்தை சாய்த்தார். ஆனால் அதே ஓவரில் அஸ்வின் கீழே விழுந்து காயம் பட்டார். அவரின் தோள்பட்டை இதில் விலகியது. இதனால் எஞ்சிய போட்டியில் பவுலிங் போட முடியாமல் அஸ்வின் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

Story first published: Sunday, September 20, 2020, 23:52 [IST]
Other articles published on Sep 20, 2020
English summary
IPL: Ashwin bowled really well in the Delhi match against Punjab today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+