Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடக் கொடுமையே.. கடைசியில் ஐபிஎல் இப்படி பொழுது போக்க ஆரம்பிச்சிருச்சே!

சென்னை: ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஐபிஎல் தனது ஸ்டைலில் ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைத்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறது.

Recommended Video

ரசிகர்கள் இல்லாம டி20 தொடர் நினைச்சு பார்க்கக்கூட முடியல - ஆலன் பார்டர்

கொரோனாவைரஸ் காரணமாக 13வது ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எப்போது போட்டி நடக்கும் என்பது தெரியவில்லை. மே 3ம் தேதி வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதுவரை போட்டி நடக்க வாய்ப்பே இல்லை என்றாகி விட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் தனது டிவிட்டரில் வீர்ரகளிடம் பேசி வருகிறது. அதாவது வீரர்கள் தங்களது ஐபிஎல் மலரும் நினைவுகளை வீடியோக்களாக அனுப்பி அதை ஐபிஎல் டிவிட்டரில் போட்டு வருகிறார்கள்.

கண்டுபிடிங்க பார்க்கலாம்

சுரேஷ் ரெய்னா, மாத்யூ ஹெய்டன் என பலரும் மலரும் அனுபவங்களை அதில் போட்டுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் நிர்வாகமும் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வருகிறது. அந்த வகையில் ரசிகர்களுக்கு ஒரு ஜாலி போட்டி வைத்துள்ளது. இந்த இரு படங்களில் 3 வித்தியாசத்தை கண்டுபிடிங்க பார்க்கலாம் என்று ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது ஐபிஎல்.

தோனி விக்கெட் கீப்பிங்

தோனி விக்கெட் கீப்பிங்

இந்த படத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பேட் செய்து கொண்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பின்னால் நிற்கிறார். ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்கிறார் ரோஹித் சர்மா. பந்து பறந்து போவதைப் பார்த்தபடி நிற்கிறார் தோனி. இதுதான் அந்தப் படம். அதில்தான் 3 வித்தியாசத்தை கண்டுபிடிக்கச் சொல்லிருக்கிறது ஐபிஎல். கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக அதை சுட்டிக் காட்டி விடையும் கொடுத்திருக்கிறது.

அந்த 3 வித்தியாசம்

அந்த 3 வித்தியாசம்

இதுதான் அந்த 3 வித்தியாசம். அதாவது ரோஹித் சர்மாவின் ஷூ ஒரு வித்தியாசம், 2வது தோனியின் பேன்ட் பாக்கெட்டில் நீல நிறம் இல்லை. 3வது வித்தியாசம் தோனியின் பின்பக்கம் தொப்பியைக் காணோம். இதுதாங்க அந்த 3 வித்தியாசம். இதில் பலர் கலந்து கொணடு சூப்பராக விடை சொல்லியுள்ளனர். பலர் தப்புத் தப்பாகவும் செொல்லியுள்ளனர். ஆக மொத்தம் இந்த விளையாட்டு களை கட்டி விட்டது.

60 வித்தியாசமும் வரும் போலயே

60 வித்தியாசமும் வரும் போலயே

தற்போது மே 3ம் தேதிக்கு மேல்தான் போட்டிகள் நடக்கும் வாய்ப்புகள் இருப்பதால் அடுத்து 6 வித்தியாசம், 60 வித்தியாசம் என ஐபிஎல் நிர்வாகம் இறங்கி அடிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று ரசிகர்கள் இப்போதே கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். எனவே ஐபிஎல் டிவிட்டர் பக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம்.. ஜாலியாக விளையாடுவோம்.

Story first published: Tuesday, April 14, 2020, 18:39 [IST]
Other articles published on Apr 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+