Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9-வது ஐபிஎல் வீரர்கள் ஏலம்: ஷேன் வாட்சனை ரூ9.5 கோடிக்கு வாங்கிய பெங்களூர்! யுவிக்கு ரூ7 கோடி!!

பெங்களூர்: 9-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனை ரூ9.5 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இந்திய அணியின் யுவராஜ்சிங்கை ரூ7 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.

9-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 230 பேர் இந்தியர்கள்.

IPL Auction 2016: Shane Watson Sold to Royal Challengers Bangalore for 9.5 Crores

இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

- முதல் வீரராக இங்கிலாந்தின் கெவின்பீட்டர்சனை ரூ3.5 கோடிக்கு ஏலம் எடுத்தது புனே அணி.

- நியூசிலாந்தின் மார்டின் கப்திலை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

- மேற்கிந்திய தீவுகளின் ஸ்மித்தை ரூ2.30 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜ்கோட் அணி

- இஷாந்த் சர்மாவை ரூ3.80 கோடிக்கு புனே அணி ஏலம் எடுத்தது

- ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனை ரூ9.5 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

- ஆஷிஸ் நெஹ்ராவை ரூ5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

- யுவராஜ்சிங்கை ரூ7 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது

Story first published: Saturday, February 6, 2016, 10:22 [IST]
Other articles published on Feb 6, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+