Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

578 வீரர்கள்.. 8 அணிகள்.. இந்த ஐபிஎல்லில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சென்னை: ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இந்த மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த ஏலம் பெங்களூரில் நடக்க இருக்கிறது.

சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. ரசிகர்களின் ரத்தம் எல்லாம் இதன் காரணமாகவே கொதிப்பாக துடித்துக் கொண்டு இருக்கிறது.

இந்த ஐபிஎல் போட்டியில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகிறது. இதில் 1122 வீரர்கள் கலந்து கொள்ள விண்ணப்பித்து இருந்தார்கள். 578 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ்

டெக்கான் அணி சென்ற பின் உருவான அணிதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 2016ல் இவர்கள் ஐபிஎல் போட்டியை வெல்வார்கள் என்று யாரும் கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். வார்னர், புவனேஷ்வர்குமார் என இந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது. யாருக்கு தெரியும் முக்கியமான வீரர் யாரையாவது இந்த அணி இந்த முறை வளைத்து போடலாம்.

கிங்ஸ் லெவன்

கிங்ஸ் லெவன்

பெயரில் மட்டும் கிங் இருக்கும் அணி. கிங்ஸ் இருக்கும் அணி எல்லாம் சென்னை சூப்பர் கிங் ஆகிவிட முடியுமா. கிங்ஸ் லெவன் பஞ்சாப் 2014 ஐபிஎல் தவிர எந்த ஐபிஎல் போட்டியிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இந்த முறை அக்சர் பட்டேலை மட்டும் வேண்டாவெறுப்பாக ரிடெய்ன் செய்து இருக்கிறது.

டெல்லி அணி

டெல்லி அணி

டெல்லி அணி எதற்காக ஐபிஎல் போட்டியில் இருக்கிறது என்றே தெரியவில்லை. 2012 ஐபிஎல் போட்டியில் இறுதி சுற்றுக்கு போனதோடு சரி அதன்பின் நாங்களும் விளையாடுறோம் பாஸ் என ஜாலியாக சுற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற ஏதாவது திட்டம் வைத்துள்ளதாக என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஷ்ரேயஸ் ஐயர், ரிஷாப் பாண்ட், கிறிஸ் மோரிஸ் ஆகியோரை ரீட்டெய்ன் செய்து இருக்கிறது.

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

ஐபில் முதல் சீசனில் காமெடியனாக இருந்த அணிதான் கொல்கத்தா. இவர்களின் உடை, கால் பேட் என எல்லாமே காமெடியாக இருந்தது. ஆனால் அணிக்கு கேப்டனாக கம்பீர் வந்த பின் அணி மாறியது. இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று தன்னை தேர்வு செய்யாத இந்திய அணிக்கு கம்பீர் பதில் கொடுத்தார். ஆனால் தற்போது கேகேஆர் அந்த கம்பீரையே ரீட்டெய்ன் செய்யாமல் இருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

பெங்களூர்

பெங்களூர்

உலகக்கோப்பைக்கு தென்னாப்பிரிக்கா எப்படியோ அப்படித்தான் பெங்களூர் அணி ஐபிஎல் போட்டிக்கு. உலகில் இருக்கும் சிறந்த வீரர்கள் எல்லாம் அணியில் இருந்தாலும் கூட இந்த டீம் ஏனோ கோப்பை அடித்தது இல்லை. இந்த முறை பெங்களூர் யாரை அதிக பணம் கொடுத்து எடுக்க போகிறது என்று தெரியவில்லை. ஏற்கனவே கோஹ்லியை 17 கோடி கொடுத்து ரீட்டெய்ன் செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

சென்னை அணியின் பரமவைரி இந்த மும்பை அணிதான். ரோஹித் தன்னை சிறந்த டி-20 கேப்டனாக நிரூபித்தது ஐபிஎல் போட்டியில்தான். 2013, 2015, 2017 என மூன்று வருடம் கப் அடித்து இருக்கிறது. சச்சின், ஜெயசூரியா, மலிங்கா, ஹர்பஜன் என வீரர்களை விட அறிவுரையாளர்கள்தான் அணியில் அதிகம் இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

பாவம் ராஜஸ்தான் அணியும் கடந்த 2 வருடமாக ஐபிஎல் விளையாட முடியாமல் இருந்தது. முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையுடன் மோதி கோப்பையை வென்ற அணி இது. அதன்பின் சரியாக விளையாடவில்லை என்றாலும் இந்த முறை மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என்றும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விசில் போடு

விசில் போடு

2 வருடத்திற்கு பின் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. கிரிக்கெட் ரசிர்களுக்கு இதை விட ஒரு நல்ல செய்தி சொல்ல முடியும் என்றால் சொல்ல முடியும். டோணி மீண்டும் அணிக்கு வந்துவிட்டார். அதேபோல் ரெய்னா, ஜடேஜாவும் அணிக்கு வந்துவிட்டார்கள். இதனால் சென்னை அணி இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வென்று பெரிய விசில் அடிக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

Story first published: Wednesday, January 24, 2018, 15:11 [IST]
Other articles published on Jan 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+