For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளை ஐபிஎல் ஏலம்.. யார் ஏலம் எடுக்கப்படுவார்கள்.. யார் புறக்கணிக்கப்படுவார்கள்.. என்ன நடக்க போகிறது?

ஐபிஎல் ஏலம் நாளை மற்றும் நாளை மறுநாள் பெங்களூரில் நடக்க இருக்கிறது.

By Shyamsundar

சென்னை: இந்த வருட கிரிக்கெட் திருவிழாவின் ஐபிஎல்லுக்கான கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பித்துவிட்டது. ஐபிஎல் ஏலம் நாளை மற்றும் நாளை மறுநாள் பெங்களூரில் நடக்க இருக்கிறது.

அணியின் உரிமையாளர்களுக்கு பெங்களூர் பிடித்து இருப்பதால் இந்த முறையும் அதே இடத்தில் ஏலம் நடத்தப்பட இருக்கிறது. அனைத்து வீரர்களின் பெயரும் பட்டியலிடப்பட்டு தயாராகிவிட்டது.

ஏலம் விடக்கூடிய நபர் யார், எவ்வளவு பணம் மொத்தமாக செலவிடப்படாமல் இருக்க போகிறது என்றெல்லாம் கூறப்பட்டு இருக்கிறது. பல முக்கியமான விவரங்களும் வெளியாகி இருக்கிறது.

வீரர்கள்

வீரர்கள்

இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1122 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களின் விருப்ப விண்ணப்பத்தை வாங்கி ஐபிஎல் நிர்வாகம் பரிசீலனை செய்தது. இதில் தற்போது 578 வீரர்கள் இறுதி பட்டியலுக்கு தேர்வாகி இருக்கிறார்கள்.

எடுக்கப்படும் நபர்கள்

எடுக்கப்படும் நபர்கள்

இந்த பட்டியலில் இருக்கும் எல்லோரும் எடுக்கப்படமாட்டார்கள். 182 வீரர்கள் மட்டுமே பொதுவாக ஏலத்திற்கு எடுக்கப்பட இருக்கிறார்கள். இந்த 578 பேரில் 360 பேர் இந்தியாவை சேர்ந்த வீரர்கள்.

வீரர்கள் ரிட்டென்சன்

வீரர்கள் ரிட்டென்சன்

இந்த வீரர்கள் போக மற்ற வீரர்கள் ஏற்கனவே ரிட்டென்சன் மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். போன ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களை இந்த முறையின் மூலம் அணியில் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைக்க முடியும். இப்போது எல்லா அணிகளிடமும் 2-3 ரிட்டென்சன் மீதம் இருக்கிறது.

எப்படி

எப்படி

இந்த 578 பேரும் அவர்கள் பவுலரா, பேட்ஸ்மேனா, முக்கிய வீரரா என பார்க்கப்பட்டு பிரிக்கப்படுவார்கள். பின் ஒரு குழுவாக அவர்கள் உருவாக்கப்படுவார்கள். ஒவ்வொரு வீரர் பெயரையும் சொல்லும் போது விருப்பப்பட்ட அணி அவர்களை எடுக்கலாம். எல்லோருக்கும் குறைந்தபட்ச தொகை இருக்கும். அதற்கு கீழ் எடுக்க முடியாது.

மீதம் இருக்கும் வீரர்கள்

மீதம் இருக்கும் வீரர்கள்

இந்த ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படும். அவர்களின் பெயர்கள் அனைத்தும் எழுதப்பட்டு பட்டியலும் கொடுக்கப்படும். அதில் விருப்பம் உள்ளவர்களை அணிகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த வீரர்களின் குறைந்தபட்ச தொகை பாதியாக குறைக்கப்படும்.

ஏலம்

ஏலம்

ஏலம் எடுப்பவர் 'வீரர் விற்கப்பட்டார்'' என்று கூறும் வரை ஏலம் நடக்கும். ஏலம் விட 'வேல்ஸ்' நாட்டில் இருந்து 'மாட்லி' என்பவர் வந்து இருக்கிறார். இவர் 1978ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற ஏலம் விடும் பணியில் இருக்கிறார். அதே போல் இவர் அங்கு நடக்கும் தேசிய போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். முன்னாள் ஐபிஎல் இயக்குனர் லலித் மோடி இவரை 2008 ஐபிஎல் போட்டியின் போது அறிமுகப்படுத்தினார்.

எத்தனை மணி

எத்தனை மணி

இந்த ஏலம் பெங்களூரில் நாளையும் , நாளை மறுநாளும் நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கு இது மாலை வரை நடக்கும். ஐடிசி ராயல் கார்டியனா ஹோட்டலில் நடக்கும். இதன் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வாங்கி இருக்கிறது.

மீதம் இருக்கும் பணம்

மீதம் இருக்கும் பணம்

எல்லா அணிகளுக்கும் 80 கோடி பட்ஜெட் கொடுக்கப்பட்டது. மொத்தம் 640 கோடி ஆகும். அடுத்த ஐபிஎல்லில் இது 82 கோடியாக உயர்த்தப்படும். அனைத்து அணிகளையும் சேர்த்து தற்போது 422.5 கோடி மீதம் இருக்கிறது.

அணிகள்

அணிகள்

மொத்தம் 8 அணிகள் இருக்கிறது. மும்பை 47 கோடி , பெங்களூர் 49 கோடி, ஹைதராபாத் 59 கோடி, கொல்கத்தா 59 கோடி, டெல்லி 47 கோடி, சென்னை 47 கோடி, பஞ்சாப் 67.5 கோடி, ராஜஸ்தான் 67.5 கோடி மீதம் இருக்கிறது.

Story first published: Friday, January 26, 2018, 16:33 [IST]
Other articles published on Jan 26, 2018
English summary
CSK, Rajasthan team has back to the IPL. IPL 2018 auction will be held in Bangalore on January 27 and 28. Dhoni, Raina, Jadeja has retained to CSK team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+