Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல கோடிப்பே.. பல கோடி.. என்னது சிஎஸ்கே கிட்ட இவ்வளவு பணம் இருக்கா!

சென்னை: இதோ ஐபிஎல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. அடுத்த வாரம் ஐபிஎல் ஏலம் நடக்க உள்ளது. சென்னை அணி இந்த முறை கோப்பை அடிக்க நிறைய திட்டங்கள் தீட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் அனைத்து அணிகளும் ரிட்டென்சன் முறையில் ஏற்கனவே சில வீரர்களை அணியில் எடுத்துவிட்டது. இதற்கே பல கோடிகளை அணிகள் செலவு செய்து இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது அனைத்து அணிகளிடமும் நிறைய பணம் மிச்சம் இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காமல் ஒரு அணி மட்டும் நிறைய கோடிகளை மிச்சப்படுத்தி வைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி ரிட்டென்சன் மூலம் ரோஹித் சர்மா (15 கோடி) ஹர்திக் பாண்டியா (11 கோடி) பும்ரா (7கோடி) ஆகியோரை எடுத்தது. இன்னும் 2 ரிட்டென்சன் அவர்களிடம் மீதம் இருக்கிறது. இந்த அணி 33 கோடி செலவு செய்துள்ளது. 47 கோடி அவர்களிடம் மீதம் இருக்கிறது.

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரிட்டென்சன் மூலம் கோஹ்லி (17 கோடி) ஏபி டி வில்லியர்ஸ் (11 கோடி) சர்ப்ராஸ் கான் (3கோடி) ஆகியோரை எடுத்தது. இன்னும் 2 ரிட்டென்சன் அவர்களிடம் மீதம் இருக்கிறது. இந்த அணி 31 கோடி செலவு செய்துள்ளது. 49 கோடி அவர்களிடம் மீதம் இருக்கிறது.

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ரிட்டென்சன் மூலம் டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார் ஆகியோரை மட்டும் எடுத்தது. இன்னும் 3 ரிட்டென்சன் அவர்களிடம் மீதம் இருக்கிறது. இந்த அணி 21 கோடி செலவு செய்துள்ளது. 59 கோடி அவர்களிடம் மீதம் இருக்கிறது.

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி ரிட்டென்சன் மூலம் சுனில் நரேன், ஆண்ட்ரு ரசுல் ஆகியோரை எடுத்தது. இன்னும் 3 ரிட்டென்சன் அவர்களிடம் மீதம் இருக்கிறது. இந்த அணி 21 கோடி செலவு செய்துள்ளது. 59 கோடி அவர்களிடம் மீதம் இருக்கிறது.

டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரிட்டென்சன் மூலம் ரிஷாப் பேண்ட் (15 கோடி) கிறிஸ் மோரிஸ் (11 கோடி) ஷ்ரேயஸ் ஐயர் (7கோடி) ஆகியோரை எடுத்தது. இன்னும் 2 ரிட்டென்சன் அவர்களிடம் மீதம் இருக்கிறது. இந்த அணி 33 கோடி செலவு செய்துள்ளது. 47 கோடி அவர்களிடம் மீதம் இருக்கிறது.

சூப்பர் கிங்ஸ்

சூப்பர் கிங்ஸ்

சென்னை அணி இந்த முறை தனது சிங்கங்கள் டோணி (15 கோடி), ரெய்னா (11 கோடி), ஜடேஜா (7 கோடி) ஆகியோரை ரிட்டென்சன் எடுத்தது. இன்னும் 2 ரிட்டென்சன் அவர்களிடம் மீதம் இருக்கிறது. இந்த அணி 33 கோடி செலவு செய்துள்ளது. 47 கோடி அவர்களிடம் மீதம் இருக்கிறது.

கிங்ஸ் 11 பஞ்சாப்

கிங்ஸ் 11 பஞ்சாப்

கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ரிட்டென்சன் மூலம் அக்சர் பட்டேல மட்டும் எடுத்தது. இன்னும் 3 ரிட்டென்சன் அவர்களிடம் மீதம் இருக்கிறது. இவர்கள் 12.5 கோடி செலவு செய்துள்ளது. 67.5 கோடி அவர்களிடம் மீதம் இருக்கிறது. இவர்களிடம் தான் அதிக பணம் தற்போது உள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரிட்டென்சன் மூலம் ஸ்டீவ் ஸ்மித்தை மட்டும் எடுத்தது. இன்னும் 3 ரிட்டென்சன் அவர்களிடம் மீதம் இருக்கிறது. இவர்கள் 12.5 கோடி செலவு செய்துள்ளது. 67.5 கோடி அவர்களிடம் மீதம் இருக்கிறது. இவர்களிடம் பஞ்சாப்பிற்கு அடுத்தபடி அதிக பணம் உள்ளது.

Story first published: Thursday, January 25, 2018, 14:36 [IST]
Other articles published on Jan 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+