For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிட்செல் ஜான்சனை கலாய்த்த தமிழர்.. ஒரே பதிலில் சோலியை முடித்த ஜான்சன்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் பல பிரபல வீரர்கள் விற்பனையாகவில்லை.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் ஏலத்தில் விற்பனையாகவில்லை என ஒரு நபர் கேலி செய்தார். அதன் பின் நடந்தது உச்சகட்ட காமெடி. ஏன் மிட்செல் ஜான்சனை கலாய்த்தார், என்ன நடந்தது?

கோலி வம்பு செய்தார்

கோலி வம்பு செய்தார்

கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன்-ஐ வம்பிழுத்துக் கொண்டே இருந்தார். இது இந்திய முன்னாள் வீரர்கள் மத்தியிலும் விமர்சனத்தை கிளப்பியது. மிட்செல் ஜான்சன் கோலியின் இந்த நடவடிக்கையை பற்றி விமர்சித்து ஒரு பேட்டி அளித்து இருந்தார்.

ஜான்சன் கடும் விமர்சனம்

ஜான்சன் கடும் விமர்சனம்

அதில் கோலியை "ஸில்லி"யாக நடந்து கொள்கிறார் என கூறி இருந்தார் ஜான்சன். இதற்கு பழி தீர்க்க முடிவு செய்த நம்ம ஊர்க்காரர் ஒருவர் ஜான்சனை ட்விட்டரில் "ஸில்லி.. விற்பனையாகவில்லை" என குறிப்பிட்டு இருந்தார். அதாவது, ஐபிஎல் ஏலத்தில் ஜான்சன் விற்பனையாகவில்லை, இந்த நிலையில் இவர் கோலியை கேலி செய்கிறார் என்ற அர்த்தத்தில் இப்படி கூறி இருந்தார்.

ஜான்சன் செம பதில்

இதற்கு மிட்செல் ஜான்சன் சொன்ன பதில் தான் செமையான ட்விஸ்ட். "ஹலோ சாம்பியன்! நான் முன்பே எல்லா கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டேன்" என பதில் கூற, கேலி செய்யப் போனவரின் நிலைமை பரிதாபமாக போய் விட்டது.

அடித்துக் கொள்ளும் இணையவாசிகள்

அடித்துக் கொள்ளும் இணையவாசிகள்

இது தான் சாக்கு என ஆஸ்திரேலியர்கள் கேலி செய்த நபரை வறுத்து எடுத்து வருகிறார்கள். மற்றொரு புறம் மிட்செல் ஜான்சனை திட்டு திட்டென திட்டி ஏராளமான ட்வீட்களை பரப்பி வருகிறார்கள் இந்திய இணையவாசிகள். இனிமே கேலி செய்யப் போகும் போது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு போங்கப்பா.. அரைகுறையா கேலி பண்ணி இப்படி வாங்கி கட்டிக்கிட்டு வராதீங்க..

வீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்

Story first published: Wednesday, December 19, 2018, 16:02 [IST]
Other articles published on Dec 19, 2018
English summary
IPL auction 2019 - Indian fan trolled Mitchell Johnson but it went wrong
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X