Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம் : செம ட்விஸ்ட்.. ஜெயதேவ் உனட்கட்-ஐ “விட்டுப் பிடித்த” ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர்: இந்திய வீரர் ஜெயதேவ் உனட்கட் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டார்.

ஜெயதேவ் உனட்கட் சென்ற ஆண்டு 11.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த மாதம் அவரை அணியில் இருந்து விடுவித்தது ராஜஸ்தான் அணி.

எனினும், தற்போது மீண்டும் அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஏன் இப்படி செய்தது?

சென்ற ஆண்டு ஏலம்

சென்ற ஆண்டு ஏலம்

ஜெயதேவ் உனட்கட் சென்ற ஆண்டில் 11.50 கோடிக்கு ஏலம் விடப்பட்டு பல வீரர்களை பொறாமையில் மூழ்க வைத்தார். அத்தனை விலைக்கு வாங்கப்பட்டும் சென்ற ஐபிஎல் சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மற்ற அணிகள் திட்டம்

மற்ற அணிகள் திட்டம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெயதேவை விடுவித்ததற்கு இது தான் காரணம் என கருதப்பட்டது. அதனால், இந்த முறை ஜெயதேவ் உனட்கட்டை வாங்க மற்ற அணிகள் போட்டி போடும் என எதிர்பார்ப்பு நிலவியது.

ட்விஸ்ட் வைத்த ராஜஸ்தான்

ட்விஸ்ட் வைத்த ராஜஸ்தான்

ஆனால், ஜெயதேவ் பெயர் அறிவிக்கப்பட்ட உடன் டெல்லி அணியுடன் போட்டி போடத் துவங்கியது ராஜஸ்தான். பின்னர் டெல்லி அணி பின் வாங்கியது. அடுத்து சென்னை மற்றும் பஞ்சாப் அணியுடன் போட்டி போட்டு ஜெயதேவை 8.40 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான்.

இப்படியும் பண்ணலாம்

இப்படியும் பண்ணலாம்

விடுவிக்கப்பட்ட வீரரை மீண்டும் ஏன் வாங்கியது ராஜஸ்தான்? இதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். 11.50 கோடிக்கு சென்ற ஆண்டு வாங்கப்பட்ட ஜெயதேவை 8.40 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான். இதன் மூலம் கிட்டதட்ட 3 கோடி வரை மிச்சப்படுத்தியுள்ளது ராஜஸ்தான். இதன் மூலம், ஜெயதேவை வாங்கலாம் என நினைத்திருந்த சென்னை அணி ஏமாற்றம் அடைந்தது.

வீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்

Story first published: Tuesday, December 18, 2018, 17:45 [IST]
Other articles published on Dec 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+