Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா தானே ரன் எடுக்குறேன்.. ஏன் என்னை ஏலம் எடுக்கலை? இந்திய பேட்ஸ்மேன் புலம்பல்

ஜெய்ப்பூர் : இந்திய கிரிக்கெட் அணிக்காக சில மேட்ச்கள் ஆடிய பேட்ஸ்மேன் மனோஜ் திவாரியை எந்த ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இதனால், அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்த அவர் தன் மனக்குறையை சமூக வலைதளத்தில் கொட்டினார்.

ஏலம் பற்றிய எதிர்பார்ப்பு

ஏலம் பற்றிய எதிர்பார்ப்பு

மனோஜ் திவாரி இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடி உள்ள வீரர். 2017 ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக ஆடிய போது சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஐபிஎல் 2018 சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடினார். அந்த அணியில் இருந்து விடுக்கப்பட்ட நிலையில், வேறு அணிகள் தன்னை ஏலம் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.

முதல் சுற்றில் விலை போகாத திவாரி

முதல் சுற்றில் விலை போகாத திவாரி

ஆனால், நேற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக முதல் சுற்றில் மனோஜ் திவாரியை வாங்க ஆளில்லை. யுவராஜ் சிங்கும் முதல் சுற்றில் ஏலம் போகவில்லை என்பதால் மனோஜ் திவாரியை மறந்துவிட்டு பலரும் யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை என்பதை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.

யாருமே கண்டுகொள்ளவில்லை

யாருமே கண்டுகொள்ளவில்லை

பின்னர் கடைசி சுற்றில் மீண்டும் மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் பெயர்கள் ஏலத்தில் வந்தன. அப்போது யுவராஜ் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், மனோஜ் திவாரியை சீந்துவார் யாருமில்லை.

மனோஜ் திவாரி வருத்தம்

இதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் திவாரி ட்விட்டரில் தன் சோகத்தை பதிவிட்டுள்ளார். அதில் 2011இல் தன் முதல் சர்வதேச சதம் அடித்த பின்னர் 14 போட்டிகளுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது, 2017 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 324 ரன்கள் குவித்தது, தான் வாங்கிய விருதுகள் ஆகியவற்றை பற்றி கூறி, இவ்வளவு இருந்தும் என்னை ஏன் யாருமே வாங்கவில்லை? என்ன தான் இங்கே தவறாக இருக்கிறது? என கேள்வி கேட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

ஏலத்தில் தேர்வான, தேர்வாகாத வீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்

Story first published: Wednesday, December 19, 2018, 11:10 [IST]
Other articles published on Dec 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+