For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ipl Auction 2019: எட்டு அணிகள்.. 60 வீரர்கள்.. முடிவுக்கு வந்த ஏலம்

ஜெய்ப்பூர் : 2019 இந்தியன் பிரீமியர் லீக்-கிற்கான ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

இன்று ஒருநாள் மட்டுமே நடந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர். இவர்களில் 20 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், ஆல்-ரவுண்டர்கள் ஆகியோருக்கு ஐபிஎல் அணிகள் கடுமையாக போட்டி போட்டு ஏலம் கேட்டன. ஜெயதேவ் உனட்கட் மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் அதிக விலையான 8.40 கோடிக்கு ஏலம் போனார்கள்.

IPL auction 2019 - Players bids and sold details - LIVE UPDATES

வீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்

Dec 18, 2018, 9:15 pm IST

ஐபிஎல் 2019 ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்

Dec 18, 2018, 9:15 pm IST

இதில் சுமார் 20 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்

Dec 18, 2018, 9:15 pm IST

எட்டு அணிகளும் சேர்ந்து 106.80 கோடி செலவிட்டுள்ளது

Dec 18, 2018, 9:12 pm IST

ஐபிஎல் 2019 ஏலம் நிறைவடைந்தது

Dec 18, 2018, 9:11 pm IST

ரியான், வோஹ்ரா, ஆஷ்டன் ஆகியோரை அடிப்படை விலைக்கு ராஜஸ்தான் வாங்கியது

Dec 18, 2018, 9:09 pm IST

ஸ்ரீகாந்த் முண்டே-ஐ அடிப்படை விலை 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி வாங்கியது

Dec 18, 2018, 9:06 pm IST

ஜலஜ் சக்சேனா, பண்டாரு ஐயப்பா ஆகியோரை அடிப்படை விலை 20 லட்சத்துக்கு வாங்கியது டெல்லி

Dec 18, 2018, 9:05 pm IST

இங்கிலாந்து வீரர் ஜோ டென்லி-யை அடிப்படை விலை 1 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது

Dec 18, 2018, 9:04 pm IST

சுபம் ரஞ்சன்-ஐ அடிப்படை விலை 20 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது

Dec 18, 2018, 9:04 pm IST

ருதுராஜ் கெய்க்வாட்-ஐ அடிப்படை விலை 20 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது

Dec 18, 2018, 9:03 pm IST

ஐபிஎல் ஏலம் : தமிழக வீரர் முருகன் அஸ்வின் அடிப்படை விலை 20 லட்சத்துக்கு ஏலம் போனார்

Dec 18, 2018, 9:02 pm IST

தமிழக வீரர் முருகன் அஸ்வினை 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி

Dec 18, 2018, 8:41 pm IST

அக்ஷதீப் நாத்-ஐ 3.60 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூர் அணி

Dec 18, 2018, 8:28 pm IST

யுவராஜ் சிங்கை ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி

Dec 18, 2018, 8:28 pm IST

முதல் சுற்றில் ஏலம் போகாத யுவராஜ் சிங் இரண்டாம் சுற்றில் 1 கோடிக்கு ஏலம் போயுள்ளார்

Dec 18, 2018, 8:28 pm IST

முதல் சுற்றில் ஏலம் போகாத மார்டின் குப்டில்-ஐ அடுத்த சுற்றில் 1 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ்

Dec 18, 2018, 8:28 pm IST

அக்னிவேஷ் அயாச்சி, ஹர்ப்ரீத் ப்ராரை அடிப்படை விலை 20 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப்

Dec 18, 2018, 8:28 pm IST

அக்னிவேஷ் அயாச்சி, ஹர்ப்ரீத் ப்ரார் இருவரும் இந்திய உள்ளூர் வீரர்கள்ஆவர்

Dec 18, 2018, 8:28 pm IST

இந்திய வீரர் பிரயாஸ் பர்மனை வாங்க பெங்களூர், பஞ்சாப் அணிகள் மோதிக் கொண்டன

Dec 18, 2018, 8:27 pm IST

20 லட்சம் அடிப்படை விலை கொண்ட பிரயாஸ் பர்மனை 1.50கோடிக்கு வாங்கியது பெங்களூர்

Dec 18, 2018, 8:23 pm IST

யார்ரா பிரித்விராஜ்-ஐ அடிப்படை விலை 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி வாங்கியது

Dec 18, 2018, 8:22 pm IST

வெ.இண்டீஸ் வீரர் கீமோ பால்-ஐ அடிப்படை விலை 50 லட்சத்துக்கு டெல்லி வாங்கியது

Dec 18, 2018, 8:22 pm IST

வெ.இண்டீஸ் வீரர் கீமோ பால்-ஐ அடிப்படை விலை 50 லட்சத்துக்கு டெல்லி வாங்கியது

Dec 18, 2018, 8:20 pm IST

இந்திய வீரர் ராசிக் சலாம்-ஐ அடிப்படை விலை 20 லட்சத்துக்கு மும்பை வாங்கியது

Dec 18, 2018, 8:18 pm IST

இந்திய வீரர் பிரப்சிம்ரன் சிங் பஞ்சாப் அணியால் 4.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

Dec 18, 2018, 8:18 pm IST

பிரப்சிம்ரன் சிங்கை ஏலம் எடுக்க பஞ்சாப், மும்பை, பெங்களூர் அணிகள் மோதின

Dec 18, 2018, 8:13 pm IST

ஷசாங்க் சிங்கை 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

Dec 18, 2018, 8:10 pm IST

தர்ஷன் நல்காண்டே-வை 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப்

Dec 18, 2018, 8:10 pm IST

மிலிந்த் குமாரை அடிப்படை விலை 20 லட்சத்துக்கு பெங்களூர் அணி வாங்கியது

Dec 18, 2018, 8:10 pm IST

பங்கஜ் ஜெய்ஸ்வால்-ஐ அடிப்படை விலை 20 லட்சத்துக்கு மும்பை வாங்கியது

Dec 18, 2018, 8:09 pm IST

இங்கிலாந்து வீரர் ஹாரி கர்னியை அடிப்படை விலை 75 லட்சத்துக்கு கொல்கத்தா வாங்கியது

Dec 18, 2018, 8:09 pm IST

அர்ஷ்தீப் சிங்கை அடிப்படை விலை 20 லட்சத்துக்கு பஞ்சாப் அணி வாங்கியது

Dec 18, 2018, 8:06 pm IST

ஐபிஎல் ஏலம் : இந்திய உள்ளூர் வீரர்கள் ஹிம்மத் சிங், நிகில் நாயக் ஏலம் எடுக்கப்பட்டனர்

Dec 18, 2018, 8:06 pm IST

ஹிம்மத் சிங்கை 65 லட்சத்துக்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 8:06 pm IST

நிகில் நாயக்கை 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 7:59 pm IST

வெ.இண்டீஸ் வீரர் ஓஷேன் தாமஸ் 1.10 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான்

Dec 18, 2018, 7:58 pm IST

தெ.ஆபிரிக்க வீரர் ஹார்டஸ் வில்ஜோன் 75 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப்

Dec 18, 2018, 7:58 pm IST

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் அலி கான் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை

Dec 18, 2018, 7:58 pm IST

தெ.ஆப்ரிக்க வீரர் ஆன்ரிச் நோர்சே 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா

Dec 18, 2018, 7:58 pm IST

ஐபிஎல் ஏலம் : வெ.இண்டீஸ் வீரர் ஷேர்பேன் ரூதர்போர்டு-ஐ 2 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி

Dec 18, 2018, 6:57 pm IST

இந்திய வீரர்கள் வினய் குமார், அபிமன்யு மிதுன், ஆஸி. வீரர் கேன் ரிச்சர்ட்சன் ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 6:57 pm IST

தெ.வீரர்கள் டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் ஏலம் எடுக்கப்படவில்லை

Dec 18, 2018, 6:51 pm IST

வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம், இலங்கை வீரர் குசால் பெரேரா ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 6:51 pm IST

நியூசி. வீரர்கள் லூக் ராஞ்சி, க்லென் பிலிப்ஸ் ஏலம் எடுக்கப்படவில்லை

Dec 18, 2018, 6:42 pm IST

நியூசி. வீரர் லாக்கி ஃபெர்கூசன்-ஐ 1.60 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா

Dec 18, 2018, 6:41 pm IST

இந்திய வீரர் பாரிந்தர் சரண்-ஐ 3.40 கோடிக்கு மும்பை அணி வாங்கியது

Dec 18, 2018, 6:36 pm IST

பெங்களூர் அணி தெ.அபிரிக்க வீரர் ஹெயின்ரிச் கிளாசன்-ஐ 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 6:36 pm IST

இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனுக்கு போட்டி போட்ட அணிகள்

Dec 18, 2018, 6:35 pm IST

சாம் கர்ரன்-ஐ 7.20 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 6:29 pm IST

வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஐபிஎல்-இல் ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 6:28 pm IST

ஆப்கன் வீரர் சாசாய், இலங்கையின் ஆஞ்ஜெலோ மாத்யூஸ் ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 6:28 pm IST

நியூசிலாந்து வீரர்கள் ஜேம்ஸ் நீஷம், கோரி ஆண்டர்சன் ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 6:28 pm IST

இந்திய வீரர்கள் சௌரப் திவாரி, ரிஷி தவான், பர்வேஸ் ரசூல் ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 6:26 pm IST

ஆஸி. வீரர்கள் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 6:26 pm IST

தெ.ஆபிரிக்க வீரர் ஹென்ரிக்ஸ், ஹஷிம் அம்லா ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 6:20 pm IST

தெ.ஆபிரிக்க வீரர் கோலின் இங்க்ராம்-ஐ 6.40 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 6:05 pm IST

ஐபிஎல் ஏலம் : தமிழக வீரர் முருகன் அஸ்வின் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை

Dec 18, 2018, 6:00 pm IST

ஐபிஎல் ஏலம் : அங்குஷ் பைன்ஸ் 20 லட்சத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 5:53 pm IST

ஐபிஎல் ஏலம் :தமிழக வீரர் பாபா இந்த்ரஜித் ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 5:48 pm IST

பஞ்சாப் அணியால் வருண் சக்ரவர்த்தி ஏலம் எடுக்கப்பட்டார்

Dec 18, 2018, 5:47 pm IST

ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி கலக்கல்

Dec 18, 2018, 5:47 pm IST

வருண் சக்ரவர்த்தி ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

Dec 18, 2018, 5:46 pm IST

ஐபிஎல் ஏலம் :வருண் சக்ரவர்த்தியை சிஎஸ்கே-வால் வாங்க முடியாத நிலை உள்ளது

Dec 18, 2018, 5:46 pm IST

ஐபிஎல் ஏலம் : வருண் சக்ரவர்த்தியின் விலை 5 கோடியை தாண்டி சென்றுள்ளது

Dec 18, 2018, 5:46 pm IST

சிஎஸ்கே அணியிடம் 3.40 கோடி மட்டுமே மீதமுள்ளதால் வருணை வாங்க முடியாது

Dec 18, 2018, 5:39 pm IST

ஐபிஎல் ஏலம் :தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு கடும் போட்டி

Dec 18, 2018, 5:39 pm IST

சிஎஸ்கே அணியும் வருண் சக்ரவர்த்திக்கு ஏலம் கேட்டு வருகிறது

Dec 18, 2018, 5:39 pm IST

ஐபிஎல் ஏலம் : ஷிவம் துபே மும்பை மாநில ஆல்-ரவுண்டர் ஆவார்

Dec 18, 2018, 5:39 pm IST

ஐபிஎல் ஏலம் : ஷிவம் துபேவை 5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூர்

Dec 18, 2018, 5:38 pm IST

ஐபிஎல் ஏலம் : மும்பை மாநில வீரர் ஷிவம் துபே-வை வாங்க கடும் போட்டி

Dec 18, 2018, 5:38 pm IST

ஐபிஎல் ஏலம் : சர்ப்ராஸ் கான்-ஐ (இந்தியா) 25 லட்சத்திற்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 5:32 pm IST

ஐபிஎல் ஏலம் : அன்மோல்பரீத் சிங்-ஐ 80 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 5:32 pm IST

ஐபிஎல் ஏலம் : தேவதட் படிக்கல்-ஐ அடிப்படை விலை 20 லட்சத்திற்கு பெங்களூர் ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 5:32 pm IST

ஐபிஎல் ஏலம் :சர்வதேச அணிகளில் ஆடாத வீரர்களின் ஏலம் நடை பெற்று வருகிறது

Dec 18, 2018, 5:08 pm IST

ஐபிஎல் ஏலம் : இந்திய வீரர் ராகுல் சர்மா, ஆஸி. வீரர் ஆடம் சாம்பா ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 5:07 pm IST

சென்னை அணி நல்ல பந்துவீச்சாளரை வாங்க நீண்ட நேரம் முயற்சி செய்து வருகிறது

Dec 18, 2018, 5:02 pm IST

ஐபிஎல் ஏலம் : மோஹித் சர்மா ரூ 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

Dec 18, 2018, 5:02 pm IST

மோஹித் சர்மாவை சென்னை அணி ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 5:02 pm IST

ஐபிஎல் ஏலம் : இந்திய வீரர் வருண் ஆரோன்-ஐ 2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி

Dec 18, 2018, 4:57 pm IST

ஐபிஎல் ஏலம்: முகமது ஷமி ரூ 4.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

Dec 18, 2018, 4:57 pm IST

முகமது ஷமியை பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 4:53 pm IST

ஐபிஎல் ஏலம் : முகமது ஷமியை அணியில் எடுக்க கடும் போட்டி

Dec 18, 2018, 4:52 pm IST

இந்திய வீரர் இஷாந்த் சர்மாவை 1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்

Dec 18, 2018, 4:52 pm IST

லசித் மலிங்காவை 2 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி

Dec 18, 2018, 4:49 pm IST

ஐபிஎல் ஏலம்:இந்திய வீரர் ஜெயதேவ் உனட்கட்-ஐ 8.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது

Dec 18, 2018, 4:40 pm IST

ஐபிஎல் ஏலம் : இந்திய வீரர் விரிதிமான் சாஹா-வை 1.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியது

Dec 18, 2018, 4:32 pm IST

வெ.இண்டீஸ் இளம் வீரர் நிக்கோலஸ் பூரன் 4.2 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது

Dec 18, 2018, 4:32 pm IST

நிக்கோலஸ் பூரன் வெ.இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஆவார். அடிப்படை விலை 75 லட்சம்.

Dec 18, 2018, 4:32 pm IST

ஐபிஎல் ஏலம் : இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 2.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியது

Dec 18, 2018, 4:31 pm IST

ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் ஆவார். அடிப்படை விலை 1.5 கோடி.

Dec 18, 2018, 4:25 pm IST

ஐபிஎல் ஏலம்: இந்திய வீரர் அக்சர் பட்டேல் 5 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது

Dec 18, 2018, 4:18 pm IST

ஐபிஎல் ஏலம் : குர்கீரத் சிங்-ஐ அடிப்படை விலை 50 லட்சத்திற்கு பெங்களூர் அணி வாங்கியது

Dec 18, 2018, 4:18 pm IST

ஐபிஎல் ஏலம் : ஹென்ரிக்ஸ்-ஐ அடிப்படை விலை 1 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது

Dec 18, 2018, 4:12 pm IST

ஐபிஎல் ஏலம்: யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

Dec 18, 2018, 4:11 pm IST

ஐபிஎல் ஏலம் : வெ. இண்டீஸ் வீரர் கார்லோஸ் ப்ராத்வைட்-ஐ 5 கோடிக்கு கொல்கத்தா வாங்கியுள்ளது

Dec 18, 2018, 4:02 pm IST

ஐபிஎல் ஏலம் : பிரெண்டன் மெக்குல்லம், மார்டின் குப்டில் ஏலம் போகவில்லை

Dec 18, 2018, 3:58 pm IST

ஐபிஎல் ஏலம் : ஷிம்ரன் ஹெட்மயர்-ஐ 4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூர்

Dec 18, 2018, 3:58 pm IST

ஐபிஎல் ஏலம்: விண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மேயருக்கு ரூ.4.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

Dec 18, 2018, 3:58 pm IST

ஷிம்ரானை பெங்களூர் அணி ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 3:58 pm IST

ஐபிஎல் ஏலம் : விண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மேயருக்கு கடும் போட்டி

Dec 18, 2018, 3:58 pm IST

ஷிம்ரானை ஏலம் எடுக்க பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் போட்டி

Dec 18, 2018, 3:57 pm IST

ஐபிஎல் ஏலம் : ஷிம்ரன் ஹெட்மயர்-ஐ ஏலம் எடுக்க கடும் போட்டி

Dec 18, 2018, 3:57 pm IST

பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் இடையே கடும் போட்டி

Dec 18, 2018, 3:49 pm IST

ஐபிஎல் ஏலம் : ஹனுமா விஹாரி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

Dec 18, 2018, 3:49 pm IST

ஹனுமா விஹாரியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது

Dec 18, 2018, 3:46 pm IST

ஐபிஎல் ஏலம் : ஹனுமா விஹாரியை ஏலம் எடுக்க கடும் போட்டி

Dec 18, 2018, 3:46 pm IST

டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி

Dec 18, 2018, 3:46 pm IST

ஐபிஎல் 2019 வீரர்கள் ஏலம் சற்று முன் துவங்கியது

Dec 18, 2018, 3:46 pm IST

ஐபிஎல் ஏலம் : மனோஜ் திவாரி ஏலம் எடுக்கப்படவில்லை

Dec 18, 2018, 3:46 pm IST

மனோஜ் திவாரியின் குறைந்தபட்ச விலை ரூ.50 லட்சம் மட்டுமே

Dec 18, 2018, 3:42 pm IST

ஐபிஎல் 2019 ஏலம் : ஜெய்ப்பூரில் இந்த ஏலம் நடக்கிறது

Dec 18, 2018, 3:42 pm IST

ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள மொத்தம் 1003 வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர்

Dec 18, 2018, 3:41 pm IST

ஐபிஎல் ஏலத்திற்கு 346 வீரர்களின் விண்ணப்பங்கள்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Dec 18, 2018, 3:41 pm IST

ஐபிஎல் ஏலத்தில் 70 வீரர்கள்தான் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர்

Dec 18, 2018, 3:05 pm IST

யுவராஜ் சிங், முகமது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர்

Dec 18, 2018, 3:04 pm IST

70 வீரர்கள் இன்று ஏலம் மூலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது

Dec 18, 2018, 2:58 pm IST

ஐபிஎல் 2019: ஏலம் இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது

Dec 18, 2018, 12:33 pm IST

இதுவரை ஐபில் ஏலம் நடத்தி வந்த பிரபல "ஹேமர்மேன்" ரிச்சர்ட் மேட்லி மாற்றப்பட்டு இந்த முறை ஹ்யூ எட்மீட்ஸ் ஏலத்தை நடத்த உள்ளார். ரிச்சர்ட் மேட்லி, தான் திடீரென நீக்கப்பட்டதால் கடும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்து இருந்தார்.

Dec 18, 2018, 12:10 pm IST

ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான இயக்குனராக முன்னாள் இந்திய வீரர் ஜாகிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Dec 18, 2018, 12:10 pm IST

இதன் மூலம் சச்சின், ஜெயவர்தனே, ராபின் சிங், ஷேன் பான்ட் உள்ளிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் குழுவில் ஜாகிர் கான் இணைந்துள்ளார். ஐபில் வீரர்கள் ஏலத்திற்கு முன்னர் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

Dec 18, 2018, 12:10 pm IST

இன்று (டிசம்பர் 18) ஜெய்ப்பூரில் நடைபெறும் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்கள் நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானியுடன் ஜாகிர் கான் பங்கேற்பார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.

Story first published: Tuesday, December 18, 2018, 21:37 [IST]
Other articles published on Dec 18, 2018
English summary
IPL auction 2019 to be held at Jaipur, Rajasthan. The auction will start at 2.30pm. Nearly 346 players are going under auction this time.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+