Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2019 ஏலத்தில் 5 கோடிக்கும் மேல் ஏலம் போன எட்டு வீரர்கள் இவங்க தான்!!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2019 ஏலத்தில் இந்த முறை 70 இடங்களை நிரப்ப எட்டு அணிகளும் மோதின.

இந்த ஏலத்தில் எந்த வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்கள், எந்த அணி அவர்களை வாங்கியது, அந்த வீரர்களின் சிறப்பு என்ன என்பது பற்றி பார்ப்போம்.

வருண் சக்ரவர்த்தி (8.40 கோடி)

வருண் சக்ரவர்த்தி (8.40 கோடி)

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறந்த சுழற் பந்துவீச்சாளர். "மிஸ்டரி பௌலிங்" என்ற முறையில் பந்து வீசி வரும் அவர் டிஎன்பிஎல் தொடரில் கலக்கினார். பேட்டிங்கிலும் கை கொடுப்பார். மதுரை பாந்தர்ஸ் அணிக்காக ஆடிய அவர் அணியை கோப்பை வெல்ல வைத்ததில் பெரும் பங்கு வகித்தார். வருணை வாங்க ஐந்து அணிகள் மோதின. இறுதியில் பஞ்சாப் அணி 8.40 கோடிக்கு வாங்கியது.

ஜெயதேவ் உனட்கட் (8.40 கோடி)

ஜெயதேவ் உனட்கட் (8.40 கோடி)

ஜெயதேவ் உனட்கட் வேகப் பந்துவீச்சாளர் ஆவார். சென்ற ஆண்டு 11.50 கோடிக்கு வாங்கப்பட்ட ஜெயதேவை அணியில் இருந்து விடுவித்து விட்டு, மீண்டும் 8.40 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான். இதன் மூலம் கிட்டதட்ட 3 கோடி வரை மிச்சப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணி கடந்த மாதம் அவரை அணியில் இருந்து விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாமுவேல் கர்ரன் (7.20 கோடி)

சாமுவேல் கர்ரன் (7.20 கோடி)

இங்கிலாந்து வீரரான சாம் கர்ரன் ஆல்-ரவுண்டர் ஆவார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கர்ரன் 7.20 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. இவரது அடிப்படை விலை 2 கோடி ஆகும்.

கோலின் இங்க்ராம் (6.40 கோடி)

கோலின் இங்க்ராம் (6.40 கோடி)

தென்னாபிரிக்க வீரரான கோலின் இங்க்ராம் நல்ல பேட்ஸ்மேன் ஆவார். 2 கோடி அடிப்படை விலை கொண்ட இவரை டெல்லி கேபிடல்ஸ் அணி போராடி 6.40 கோடிக்கு வாங்கியது.

ஷிவம் துபே (5 கோடி)

ஷிவம் துபே (5 கோடி)

மும்பை மாநில வீரரான ஷிவம் துபேவை பெங்களூர் அணி 5 கோடிக்கு வாங்கியது. இவர் மாநில அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார். மும்பை அணியின் விஜய் ஹசாரே வெற்றியில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 20 லட்சம் அடிப்படை விலையில் இருந்து, அதிரடியாக 5 கோடிக்கு ஏலம் போனார் ஷிவம்.

மோஹித் சர்மா (5 கோடி)

மோஹித் சர்மா (5 கோடி)

சென்னை அணி நல்ல பந்துவீச்சாளரை தேடி வந்த நிலையில் மோஹித் சர்மாவை 5 கோடிக்கு வாங்கியது. மோஹித்தின் அடிப்படை விலை 50 லட்சம் ஆகும். கடும் போட்டிக்கு பின் சென்னை அணி அவரை வாங்கியது.

அக்சர் படேல் (5 கோடி)

அக்சர் படேல் (5 கோடி)

அக்சர் பட்டேல் இந்திய அணிக்கு ஆடியவர். தற்போது வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார். எனினும்., ஐபிஎல் அணிகள் இடையே இவரை வாங்க கடும் போட்டி இருந்தது. 1 கோடி அடிப்படை விலை கொண்ட இவரை 5 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி.

கார்லோஸ் பிராத்வைட் (5 கோடி)

கார்லோஸ் பிராத்வைட் (5 கோடி)

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டன் கார்லோஸ் பிராத்வைட்டை கொல்கத்தா அணி 5 கோடிக்கு வாங்கியது. இவர் நல்ல ஆல்-ரவுண்டர் என்பதும் கூடுதல் காரணம். இவரது அடிப்படை விலை 75 லட்சம் ஆகும்.

வீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்

Story first published: Tuesday, December 18, 2018, 22:15 [IST]
Other articles published on Dec 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+