Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம்: 5 கோடி அள்ளிய ஷிவம் துபே.. அவ்ளோ நல்லா ஆடுவாரா?

ஜெய்ப்பூர் : பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே மும்பை மாநில வீரர் ஷிவம் துபே 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

கவாஸ்கர் தான் ஷிவம் துபேவின் திறமையை பற்றி பத்திரிக்கையில் எழுதி ஐபிஎல் ஏலத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பை கிளறி விட்டார்.

அதற்கு முன்பே ஷிவம் துபே சிறப்பான ஆல்-ரவுண்டர் திறமையால் பலரையும் ஈர்த்து இருந்தார்.

ஆல்-ரவுண்டர் ஷிவம்

ஆல்-ரவுண்டர் ஷிவம்

இடது கை பேட்டிங் மற்றும் வலது கை மித வேக பந்துவீச்சாளராக ஆவார் ஷிவம் துபே. இவர் மும்பை மாநில அணிக்காக டி20 மற்றும் ரஞ்சி அணிகளில் ஆடி வருகிறார். இரண்டு அணிகளிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

மும்பை அணியில் கலக்கல்

மும்பை அணியில் கலக்கல்

இந்த ஆண்டு மும்பை அணி விஜய் ஹசாரே தொடரை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஷிவம். மேலும், தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் தன் பங்களிப்பை அளித்து வருவதால் அவர் மீதான பார்வை அதிகரிக்க காரணமானது.

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள்

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள்

ஐபிஎல் ஏலம் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற நிலையில், டிசம்பர் 17 அன்று நடந்த ரஞ்சி போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார். இது ஐபிஎல் ஏலத்தில் என்னை வாங்கப் போவது யார் என அவர் கேட்பது போலவே இருந்தது.

5 கோடிக்கு ஏலம் எடுத்த பெங்களூர்

5 கோடிக்கு ஏலம் எடுத்த பெங்களூர்

அதே போல, பெங்களூர் அணி அவரை 5 கோடிக்கு ஏலம் எடுத்தது. முன்னதாக ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர், பஞ்சாப் அணிகள் இவரை எடுக்க போட்டி போட்டன. சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஆச்சரியம் அளித்தார். அவருக்கு அடுத்து ஷிவம் 5 கோடிக்கு ஏலம் போயுள்ளார்.

வீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்

Story first published: Tuesday, December 18, 2018, 19:35 [IST]
Other articles published on Dec 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+