Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முட்டி மோதிய ஐபிஎல் அணிகள்.. ஓவர்நைட்டில் கோடீஸ்வரர்களாக மாறிய 5 வீரர்கள்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் ஏலம் டிசம்பர் 18 அன்று நடந்து முடிந்துள்ளது. சுமார் 60 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

அதில் எந்த சர்வதேச போட்டிகளிலும் ஆடியிராத 5 இந்திய வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் போயுள்ளனர்.

போட்டி போட்ட ஐபிஎல் அணிகள்

போட்டி போட்ட ஐபிஎல் அணிகள்

எப்போதும் சர்வதேச போட்டிகளில் ஆடிய, அனுபவம் கொண்ட வீரர்களை வாங்கவே அணிகள் போட்டி போடும். ஆனால், இந்த முறை இந்திய அளவில் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள சில வீரர்களை வாங்கவும் அணிகள் முட்டி மோதின. அதனால் அந்த வீரர்களின் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கும் மேல் சென்று, கோடிகளில் ஏலம் முடிந்தது. அந்த ஐந்து "திடீர் கோடீஸ்வரர்கள்" யார் என்று பார்ப்போம்.

வருண் சக்கரவர்த்தி - 8.40 கோடி

வருண் சக்கரவர்த்தி - 8.40 கோடி

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி. இவரை ஏலம் எடுக்க ஐந்து அணிகள் மோதின. அதனால், விலை சர்ரென உயர்ந்து 8 கோடிக்கும் மேல் எகிறியது. உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள இந்த சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கு அதிர்ஷ்டம் கூரையை பியத்துக் கொண்டு கொட்டியுள்ளது.

ஷிவம் துபே - 5 கோடி

ஷிவம் துபே - 5 கோடி

மும்பை வீரர் ஷிவம் துபேவும் ஆல்-ரவுண்டர் தான். ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி வரும் இவரை எடுக்கவும் போட்டி இருந்தது. கடைசியில் 5 கோடிக்கு ஏலம் போனார். பெங்களூர் அணி இவரை ஏலம் எடுத்தது.

பிரப்சிம்ரன் சிங் - 4.8 கோடி

பிரப்சிம்ரன் சிங் - 4.8 கோடி

பஞ்சாப் மாநில வீரரான பிரப்சிம்ரன் சிங் அண்டர் 23 போட்டி ஒன்றில் 298 ரன்கள் அடித்தார். கூச்-பீகார் தொடரில் 547 ரன்கள் குவித்தார். இதனால், இவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப, பஞ்சாப் அணி யாரை வாங்க போட்டி போட்டது. கடும் போட்டிக்கு பின் 4.8 கோடிக்கு இவரை ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி.

அக்ஷ்தீப் நாத் - 3.6 கோடி

அக்ஷ்தீப் நாத் - 3.6 கோடி

கடந்த 2016இல் இருந்தே ஐபிஎல் அணிகளில் இடம் பிடித்து வருகிறார். எனினும், ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் ரஞ்சி தொடரில் அடுத்தடுத்து மூன்று சதங்கள் அடித்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். இவரை பெங்களூர் அணி 3.6 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

பிரயாஸ் ராய் பர்மன் - 1.5 கோடி

பிரயாஸ் ராய் பர்மன் - 1.5 கோடி

பதினாறு வயதான பிரயாஸ் பர்மன் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக ஆடினார். இவர் கோடிக்கணக்கில் ஏலம் போவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பெங்களூர் அணி இவரை 1.6 கோடிக்கு ஏலம் எடுத்தது.

வீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்

Story first published: Wednesday, December 19, 2018, 15:16 [IST]
Other articles published on Dec 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+