Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம் எங்கே தெரியுமா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. கசிந்த தகவல்!

மும்பை : 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

கடந்த முறை ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த முறை வேறு ஒரு நகரத்தில் தான் ஐபிஎல் ஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே போல, சென்னையில் ஐபிஎல் ஏலத்தை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

2021 ஐபிஎல்

2021 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து 2021 ஐபிஎல் ஏலத்துக்கு திட்டமிட்டது பிசிசிஐ. இரு புதிய அணிகளை சேர்க்க பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்தனர்.

மினி ஏலம்

மினி ஏலம்

புதிய அணிகள் சேர்க்கப்பட்டால் 2021 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடக்கும் என கூறப்பட்டது. ஆனால், புதிய அணிகள் சேர்ப்பை தள்ளி வைத்த நிலையில், மினி ஏலம் மட்டுமே நடைபெற உள்ளது. அதுவும் சென்னை நகரத்தில் அந்த ஏலம் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

சென்னை நகரத்தை தேர்வு செய்ய முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது. பிப்ரவரி முதல் வாரம் முதல் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதே நேரத்தில் தான் ஐபிஎல் ஏலத்தையும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

தேதிகள்

தேதிகள்

வீரர்களை நீக்க, தக்க வைக்க கடைசி நாளாக ஜனவரி 21-ஐ பிசிசிஐ அறிவித்துள்ளது. அடுத்ததாக வீரர்களை அணி மாற்றம் செய்து கொள்ள கடைசி நாளாக பிப்ரவரி 4-ஐ அறிவித்துள்ளது. அதன் பின் பிப்ரவரி 11 அன்று ஏலத்தை நடத்த உள்ளது.

சென்னையில் டெஸ்ட் போட்டி

சென்னையில் டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் மற்றும் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு இடையே ஆன கால அவகாசத்தில் தான் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னையில் நடைபெற உள்ளது. எனவே, அதே சென்னையில் ஏலத்தையும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளாக கூறப்படுகிறது.

Story first published: Friday, January 8, 2021, 14:33 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+