Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவருக்கா இந்த நிலைமை.... ஆரம்ப விலைக்கே சென்ற உமேஷ் யாதவ்.. மீண்டும் அழைத்த தாய் வீடு

சென்னை: 2021 ஐபிஎல் -ல் இந்திய வேகப்பந்து வீச்சாளார் உமேஷ் யாதவ், யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது.

14வது ஐபிஎல் தொடரின் ஏலம் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வீரர்களை தேர்வு செய்து அணிகள் ஆச்சரியம் அளித்தன.

அந்தவகையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான உமேஷ் யாதவை இந்தாண்டு எந்த அணியும் எடுக்க முன்வராமல் இருந்தது. இறுதியில் அவரின் ஆரம்ப தொகையான ரூ. 1 கோடிக்கே டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

உமேஷ் யாதவ் கடந்த 2018ம் ஆண்டு பெங்களூரு அணியால் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் கடந்தாண்டு அவரின் சொதப்பலால் தொடர் முழுவதும் அணியில் இடம்பெறாமல் இருந்தார். கடந்தாண்டு 2 போட்டிகளில் விளையாடிய அவர் 7 ஓவர்களில் 83 ரன்களை வாரி வழங்கினார். இதனால் இந்தாண்டு ஆர்.சி.பி அணியால் கலட்டிவிடப்பட்டார்.

அனுபவம்

அனுபவம்

இதுவரை 121 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள உமேஷ் யாதவ், 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததே இவரின் பெஸ்ட் பவுலிங் ஆகும்.

அணி மாற்றம்

அணி மாற்றம்

உமேஷ் யாதவ் முதன்முதலில் டெல்லி அணிக்காகவே விளையாடினார். அந்த அணிக்காக 43 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 2014ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு சென்ற அவர், 4 சீசன்களில் 48 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Story first published: Friday, February 19, 2021, 8:27 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+