
இந்திய அணியில் இடம்
இந்த நிலையில், தமிழக வீரர் ஷாரூக்கானின் பெயர் ஏல மேடைக்கு வந்தது. விஜய் ஹசாரோ கோப்பை, சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் ஷாரூக்கான் தனி ஆளாக நின்று தமிழக அணிக்கு போட்டியை வென்று தந்தார். இதன் மூலம் ஷாரூக்கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

சென்னை முயற்சி
ஷாரூக்கானின் அடிப்படை விலை 40 லட்சம் ரூபாயாக இருந்தது. ஷாரூக்கான் வந்ததும் சென்னை அணி களத்தில் குதித்தது. ஆனால் சென்னைக்கு பஞ்சாப் அணி கடும் போட்டியை தந்தது. இதனையடுத்து ஷாரூக்கானுக்கு 8 கோடியே 75 லட்சம் ரூபாய் வரை வழங்க சென்னை அணி முன் வந்தது.

9 கோடி
ஆனால், பஞ்சாப் அணி 9 கோடி ரூபாய் கேட்டதால் சிஎஸ்கே பின்வாங்கியது. இதனையடுத்து பஞ்சாப் அணி ஷாரூக்கானை தட்டி சென்றது. இதனால் தமிழக ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தை சந்தித்தனர். ஷாரூக்கான் சென்னை அணியில் மட்டும் இடம்பிடித்து இருந்தால், சென்னை அணியின் பல மடங்கு அதிகரித்து இருக்கும்.

மீண்டும் பஞ்சாப்
இந்த நிலையில், பஞ்சாப் அணியில் நீடிக்க விருப்பம் இல்லாமல் தான் ஷாரூக்கான் ஏலத்திலேயே பங்கேற்றார். ஆனால், மீண்டும் பஞ்சாப் அணியை அவரை ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் அணி அவரது திறமையை எப்படி பயன்படுத்தும் என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications











