சச்சின் மகன் பெயர் வந்ததும் சிரிப்பலை..!! மும்பையை பார்த்து கிண்டல் செய்த ஆக்சனர்..!!
பெங்களூரு: ஐபில் மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் பல விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்தது.
Recommended Video
இதில் ஆக்சனர் ஹக் எட்மேடஸ் மயங்கி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடைசி அரைமணி நேரத்தை அவர் தான் ஏலத்தை நடத்தினார்.
அப்போது அவர் சில காமெடிகளையும் செய்தார்.இம்முறை மயங்கி விழுந்தால், தாங்குவதற்கு இடம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்.

இதன் பின்னர், ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. ஏலத்தில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பெயர் வந்ததும், ஆக்சனர் எட்மேடஸ், மும்பை இந்தியன்ஸ் நீங்கள் தயாரா என்பது போல் கேள்வி கேட்டார். இதனால் ஏலத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மும்பைக்கு போட்டியாக குஜராத் அணி அர்ஜூன் டெண்டுல்கரை ஏலத்தில் கேட்டது. இதனால் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பாணி அதிர்ச்சி அடைந்து, யாரா இது அர்ஜூனை எடுப்பது என்று பார்த்தார். அர்ஜூனை விட்டால் சச்சின் கோவித்து கொள்வார் அல்லவா?
இதனால் மீண்டும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு கையை உயர்த்த, மும்பை அணி அவருக்காக 30 லட்சத்தை செலவழிக்க வேண்டியதாக இருந்தது. இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர். இது வரை தனது சிறந்த செயல்பாட்டை பெரிதாக வெளிகாட்டியது இல்லை. ஆனால் தந்தை நிழலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். பார்போம், சச்சின் பெயரை காப்பாற்றுவாரா என்று..!!


Click it and Unblock the Notifications