Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விட்டதை பிடித்த மும்பை..!! பலமான அணியை உருவாக்கிய அம்பானி..!! சிங்கப்பூர் வீரருக்கு 8.25 கோடி..!!

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி தொடக்கத்தில் மிக்சர் சாப்பிடுவது போல் தோன்றினாலும், பின்னர் பணத்தை குவித்து பலமான அணியை உருவாக்கியது.

புயலுக்கு முன் அமைதி என்பதை போல், மும்பை அணி அமைதி காத்து இருந்ததற்கு அர்த்தம் இப்போது புரிந்திருக்கும்.

2வது நாள் பாதி வரை மும்பை அணி எந்த வீரரையும் வாங்கவில்லை. இதனால், தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லவாவது வீரர்களை வாங்குங்கள் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

மும்பை அணி பிளான்

மும்பை அணி பிளான்

இந்த நிலையில், தமிழக அணிக்காக விளையாடி வரும் ஆல் ரவுண்டர் மற்றும் இடது கை சுழற்பந்துவீச்சாளரான சஞ்சய் யாதவை மும்பை அணி 50 லட்சத்தை தட்டி சென்றது. இதே போன்று திலக் வர்மாவை 1.7 கோடி கொடுத்து மும்பை அணி வென்றது. இதே போன்று டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ் ஆகியோரையும் குறிவைத்து எடுத்தது மும்பை அணி.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

இதே போன்று மும்பை அணி இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஃப்ரா ஆர்ச்சரை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது மும்பை அணி. இதன் மூலம், பும்ரா, ஜோப்ரா ஆர்சர் ஆகியோர் பந்துவீச்சை பலப்படுத்துவார்கள். இருப்பினும் ஆர்ச்சர் இம்முறை காயம் காரணமாக விளையாட மாட்டார். இதனால் எதிர்காலத்தை மனதில் வைத்து மும்பை அணி இந்த முடிவை எடுத்திருக்கும்.

டிம் டேவிட்

டிம் டேவிட்

இதே போன்று அதிரடி ஆல் ரவுண்டராக சிங்கப்பூர் வீரரை சேர்ந்த டிம் டேவிட்டை 8.25 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி வாங்கியுள்ளது. டிம் டேவிட் பேட்டிங்கில் பவர் ஹிட்டர். இதனால் ஹர்திக் இடத்திற்கு டிம் டேவிட் சிறப்பான தேர்வாக இருப்பார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

பலமான அணி

பலமான அணி

ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொலார்ட், டிம் டேவிட் என பேட்டிங் வரிசையும், பும்ரா, ஜேர்ஃரா ஆர்சர், டைமல் மில்ஸ் என அதிரடி பவுலிங்கும் என மும்பை பலமான அணியை உருவாக்கியுள்ளது. எனினும் மும்பை அணி இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் இருவரை எடுத்திருக்கலாம்.

Story first published: Sunday, February 13, 2022, 18:06 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+