Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2022- மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ரோகித்தின் பலமான அணி ரெடி..!!

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி தொடக்கத்தில் தியானத்தில் இருந்த மும்பை அணி, பின்னர் தாங்கள் யார் என்பதை நிரூபித்துவிட்டனர்.

முதலில் பணத்தை சேமித்து வைத்திருந்த மும்பை அணி, மற்ற அணிகளுக்கு பணம் குறைந்தவுடன் தங்கள் பணத்தை எடுத்து ஜெய்க்கிற குதிரை மீது போட்டது.

இதன் மூலம் வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணி பலமான அணியை உருவாக்கியுள்ளது. அதனை தற்போது பார்க்கலாம்.

தொடக்கம்

தொடக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இப்போது எந்த தலைவலியும் இல்லை. எப்போதும் போல் தொடக்க வீரராக களமிறங்கலாம். தற்போது குயின்டன் டி காக் இல்லாததால், அவருக்கு பதிலாக 15 கோடி ரூபாய்க்கு மேல் போன இஷான் கிஷன் தனது ஓபனிங் திறமையை காட்டலாம்.

நடுவரிசை

நடுவரிசை

மும்பை இந்தியன்ஸ் அணியின் நடுவரிசை டி.எம்.டி. முறுக்கு கம்பி என்ற விளம்பரம் வருவது போல் செம ஸ்ட்ராங்காக உள்ளது. இளம் அதிரடி வீரர் திலக் வர்மா, நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், அண்டர் 19 ஸ்டாரான பேபி டிவில்லியர்ஸ் எனப்படும் பிரவீஸ், அதிரடி மன்னன் பொலார்டு மற்றும் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டிம் டேவிட் என மிருக பலத்துடன் உள்ளது மும்பை அணி.

பந்துவீச்சு

பந்துவீச்சு

இதே போன்று வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸ், தைமல் மில்ஸ், மெர்டித், உனாட்கட், பாசில் தம்பி ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மாயங் மார்கண்டே, பெபியன் ஆலன், முருகன் அஸ்வின், சஞ்சய் யாதவ் போன்ற வீரர்கள் உள்ளனர். மைனஸ் என்று சொன்னால் , அனுபவமுள்ள சுழற்பந்துவீச்சாளர் இல்லாததையும், முன்வரிசை வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்கள் இல்லாததையும் தான் சொல்லலாம். மற்ற படி மும்பை கெத்து தான்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, இஷான் கிஷன், 3. சூர்யகுமார் யாதவ், 4, திலக் வர்மா, 5,பிரவிஸ், 6, டிம் டேவிட், 7, பொலார்டு, 8, டேனியல் சாம்ஸ்/மெர்டித், 9, பும்ரா, 10, உனாட்கட், 11, மார்கண்டே /சஞ்சய் யாதவ். ( இதில் பொலார்டு சொதப்பினால் அதிரடி சுழற்பந்துவீச்சாளர் ஃபெபியன் ஆலனை சேர்க்கலாம்)

அணி விவரம்

அணி விவரம்

ரோகித் சர்மா, கெயிரன் பொல்லார்ட், பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், டேவல்ட் ப்ரேவிஸ், பாசில் தம்பி, முருகன் அஸ்வின், ஜெய்தேவ் உனாட்கட், மயங்க் மார்காண்டே, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டேனியல் சாம்ஸ், டிமல் மில்ஸ், டிம் டேவிட், ரிலே மெரிடித், முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் புத்தி, ஹிர்திக் சோகீன், அர்ஜுன் டெண்டுல்கர்,ஆர்யா ஜுயல், ஃபெபியன் ஆலன்

Story first published: Monday, February 14, 2022, 10:29 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+