Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : சிஎஸ்கே வைத்த ட்விஸ்ட்.. பதறிய ப்ரீத்தி ஜிந்தா.. டேரில் மிட்செல் ஏலத்தில் நடந்த சம்பவம்

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேரில் மிட்செல் ஏலத்தின் போது எடுத்த அதிரடி முடிவால் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா எரிச்சல் அடைந்தார்.

கிட்டத்தட்ட டேரில் மிட்செல்-ஐ வாங்கப் போகிறோம் என ப்ரீத்தி ஜிந்தா நினைத்த போது, சிஎஸ்கே அணி எதிர்பாராத விதமாக விலை கேட்டு அதிர வைத்தது.

IPL Auction 2024 : Daryl Mitchell bought by Chennai Super Kings for 14 Crores

நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேரில் மிட்செலை வாங்க டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு அணிகளும் விடாப் பிடியாக இருந்ததால் மிட்செல் விலை எகிறியது. ஒரு கட்டத்தில் 11.75 கோடிக்கு விலை கேட்டது பஞ்சாப் அணி. அப்போது டெல்லி அணி பின்வாங்கியது.

பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அப்போது மகிழ்ச்சியுடன் இருந்தார். 11.75 கோடிக்கு டேரில் மிட்செல்-ஐ வாங்கி விட்டோம் என அவர் நினைத்தார். ஆனால், அப்போது விலை கேட்கத் துவங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அதை எதிர்பாராத ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் விலை ஏறப் போகிறதே என எரிச்சல் அடைந்தார். ஒருவேளை விலையை ஏற்றத் தான் சிஎஸ்கே அணி விலை கேட்கிறதோ என்று கூட ப்ரீத்தி ஜிந்தா நினைத்திருக்கலாம்.

ஆனால், சிஎஸ்கே அணி விடாப் பிடியாக நின்று 14 கோடிக்கு டேரில் மிட்செல்-ஐ வாங்கியது. 2024 மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் டேரில் மிட்செல் தான். முன்னதாக மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி வாங்கி இருந்தது. அவரை 1.80 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கி இருந்தது.

Story first published: Tuesday, December 19, 2023, 15:39 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+