Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது குஜராத் டைட்டன்ஸ் இல்லை..தமிழன் டைட்டன்ஸ்! பாண்டியாவை அனுப்பிவிட்டு சோழர்களை அள்ளிப்போட்ட கில்

சென்னை: 2023 ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் குஜராத் அணியில் தமிழர்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு உள்ளனர். கிட்டத்தட்ட தமிழர்களின் அணியாக மாறி உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.

 IPL auction 2024: Gujarat Titans went all out for Tamil Nadu players this time

இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார் என்று கூறப்படுகிறது.

குஜராத் கேப்டன்: இதையடுத்து குஜராத் அணியின் கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டு உள்ளார். இன்னொரு பக்கம் குஜராத் அணியில் முக்கியமான வீரர்கள் பலர் ரிட்டென்ஷன் செய்யப்பட்டு உள்ளனர்.

டேவிட் மில்லர், ஷுப்மன் கில் (கேப்டன்), மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி. சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா ஆகியோர் அணியில் ரிட்டென்ஷன் செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று ஏலம்: அதேபோல் இன்று ஏலத்தில் முக்கியமான வீரர்கள் பலர் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர். இன்று நடந்த ஐபிஎல் 2024 ஏலத்தின் போது தமிழக ஆல்ரவுண்டர் ஷாருக் கான் ரூ.7.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஏலப் போரில் ஈடுபட்ட நிலையில் ஷாருக்கான் இறுதியில் குஜராத் அணிக்கு சென்றார்.

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர் ஆகியோர் உள்ளனர். தற்போது ஷாருக்கான் சேர்க்கப்பட்டு உள்ளார். கிட்டத்தட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது தமிழர்கள் டைட்டன்ஸ் அணியாக மாறி உள்ளது. பாண்டியா அணியில் இருந்து சென்ற நிலையில் சோழர்கள் உள்ளே வந்தது போல.. முழுக்க முழுக்க தமிழர்கள் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சிஎஸ்கே தமிழர்கள் இல்லை: ஆனால் சென்னை அணியான சிஎஸ்கேவில் தமிழர்கள் இல்லை. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.

இன்று நடந்த ஏலத்தில் தமிழர்கள் எடுக்கப்படாத நிலையில், டெர்லி மிட்சல், ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி போன்ற வீரர்களை எடுத்துள்ளது

Story first published: Tuesday, December 19, 2023, 19:57 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+