Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடியும் தோனி சகாப்தம்? புதிய ஸ்ட்ராட்டஜியை கையில் எடுத்த சிஎஸ்கே.. ஏலத்தில் இதை கவனிச்சீங்களா?

சென்னை: சிஎஸ்கே அணி இந்த முறை முக்கியமான இளம் வீரர்களை எடுத்து உள்ளது. எதிர்காலத்தை மனதில் வைத்து சில வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.

IPL auction 2024: Is CSK strategy an indication of end of Dhonis era?

சிஎஸ்கே பிளானிங்: சிஎஸ்கே சிலர் ஓய்வு பெற்றுள்ளதால், சிலர் ஓய்வு பெற உள்ளதால் எதிர்காலத்தை உறுதி செய்யும் விதமாக முக்கியமான வீரர்களை , இளம் வீரர்களை தேடி தேடி எடுத்துக்கொண்டு இருக்கிறது. எப்போதும் சிஎஸ்கே அணி பழைய வீரர்களை எடுக்கும், மூத்த வீரர்களை, ஓய்வுபெற்றவர்களை எடுக்கும். ஆனால் சிஎஸ்கே அணி இந்த முறை முழுக்க முழுக்க இளம் வீரர்களை எடுத்துள்ளது.

முக்கியமாக ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி போன்ற வீரர்களை எடுத்துள்ளது. சிஎஸ்கேவில் ஏற்கனவே அம்பதி ராயுடு போன்ற மூத்த வீரர்கள் வெளியேறி உள்ள நிலையில்தான் தற்போது இளம் வீரர்கள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

சிஎஸ்கே பிளானிங்: உதாரணமாக யாருமே எதிர்பார்க்காமல் இன்று டிராவிஸ் ஹெட்டை எடுக்க சிஎஸ்கே முயன்றது. ஹைதராபாத் உடன் கிட்டத்தட்ட ஆறரை கோடி ரூபாய் வரைக்கும் சிஎஸ்கே அணி போட்டி போட்டது. அவர் கிடைக்கவில்லை என்றதும் ரச்சின் ரவீந்திராவை எடுக்க சிஎஸ்கே முயன்றது.,

முறையாக திட்டமிட்டு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ₹1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அதேபோல் இரண்டு அணிகளுடன் மோதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

இதோடு நிற்காமல் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் வரை கொடுத்து பாட் கும்மின்ஸை வாங்கவம் கூட சிஎஸ்கே ஆர்வம் காட்டியது. சிஎஸ்கே அணியின் இந்த திட்டமிடல் மற்ற அணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. அதன்பின் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சல் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

ஜடேஜா கேப்டன்சி: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த சீசன் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் பாதியிலேயே அவர் ஓய்வுபெற வாய்ப்பு உள்ளது. இதனால் ஜடேஜா கேப்டன் ஆகும் போது அவருக்கு ஏற்ற வீரரக்ள் இருக்க வேண்டும். தோனி ஸ்டைலில் மூத்த வீரர்கள் இல்லாமல்.. ஜடேஜாவிற்கு ஏற்றபடி இளம் வீரர்கள் அணியில் இருக்க வேண்டும். ஜடேஜாவிற்கு ஏற்றபடி புதிய செட் அணிக்குள் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்தே சிஎஸ்கே அணி இந்த முறை முக்கியமான இளம் வீரர்களை எடுத்து உள்ளது.

ஏலம்: தற்போது 2023 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. வரிசையாக டாப் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டு வருகிறார்கள். ஆஸ்திரேலியா அணி நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார் அதேபோல் ஆஸ்திரேலியா அணி கேப்டன் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ரூ.20.5 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதுஷங்கா ரூ.4.6 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார். இந்திய இளம் வீரர் சிவம் மாவி ரூ.6.4 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார் . வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் ரூ.11.50 கோடிக்கு ஆர்சிபி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Story first published: Tuesday, December 19, 2023, 19:25 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+