Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction 2024 : அடித்துக் கொண்ட கொல்கத்தா - குஜராத்.. ரெக்கார்டு தொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்

துபாய் : ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே மிகப் பெரிய விலையை பெற்று இருக்கிறார் மிட்செல் ஸ்டார்க். இதற்கு காரணமே மிட்செல் ஸ்டார்க்குக்காக மிக மோசமாக போட்டி போட்ட குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தான்.

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் நீண்ட சில ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடருக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில், அவரை வாங்க போட்டி இருக்கும் என கருதப்பட்டது. அதே போல, டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடுமையாக மோதின.

IPL Auction 2024 : Mitchell Starc bought for 24.75 crores by KKR because of Gambhir - Nehra

மிட்செல் ஸ்டார்க் விலை 9.80 கோடியை எட்டிய போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தில் குதித்தது. அதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பின் வாங்கியது. மிட்செல் ஸ்டார்க்கிற்கு 10 கோடிக்கு மேல் கொடுப்பது வீண் என நினைத்த மும்பை அணியின் உரிமையாளர்கள் ஆனந்த் அம்பானி மற்றும் நீதா அம்பானி அவருக்கு விலை கேட்பதை நிறுத்தினர்.

இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் - குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் இடையே கடும் போட்டி எழுந்தது. இருவரும் தொடர்ந்து விலை கேட்டுக் கொண்டே சென்றனர்.

ஒரு கட்டத்தில் 24 கோடியை எட்டிய போதும் இருவரும் நிறுத்தவில்லை. முடிவில் 24.75 கோடி விலை கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்கியது. இது தேவையே இல்லாத போட்டி மற்றும் இது அநியாய விலை என ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் சாம் கர்ரனுக்கு 18.50 கோடி விலை கொடுக்கப்பட்டதே முன்பு அதிகமாக இருந்தது. அதை தற்போது நடைபெற்ற 2024 ஏலத்தில் பாட் கம்மின்ஸ் முறியடித்தார். அவருக்கு 20.50 விலை கிடைத்தது. அடுத்த சில நிமிடங்களில் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு விலை பெற்று அந்த சாதனையை முறியடித்தார்.

Story first published: Tuesday, December 19, 2023, 16:15 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+