Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : 20 கோடியையும் தாண்டிய விலை.. வரலாறு படைத்த பாட் கம்மின்ஸ்.. யோசிக்காத காவ்யா மாறன்

துபாய் : 2024 ஐபிஎல் தொடரில் புதிய வரலாற்றை படைத்தார் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் பாட் கம்மின்ஸ்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பாட் கம்மின்ஸ்-ஐ 20.50 கோடி கொடுத்து வாங்கியது. முன்னதாக இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் 18.50 கோடிக்கு விலை போய் இருந்தார். அதை உடைத்து 20.50 கோடிக்கு விலை பெற்று இமாலய சாதனை படைத்து இருக்கிறார் பாட் கம்மின்ஸ். சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் விடாப் பிடியாக பாட் கம்மின்ஸ்-ஐ வாங்கியே தீருவது என முடிவு எடுத்து ஏலத்தில் விலை கேட்டுக் கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.

2023 உலகக்கோப்பை தொடரை வென்ற கேப்டன் என்ற பெருமையை கொண்டவர். மேலும், வேகப் பந்துவீச்சு - பேட்ஸ்மேன் ஆவார். அத்தனை எளிதில் போட்டியை விட்டுக் கொடுக்காதவர். எனினும், அவரது பவுலிங் ஃபார்ம் சரியில்லை என்ற புகார் இருந்தது. அதையும் தாண்டி அவருக்கு ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி இருந்தது.

IPL Auction 2024 : Pat Cummins create history with 20.50 crore as Sunrisers Hyderabad bought

பாட் கம்மின்ஸ் இந்த ஏலத்தில் இத்தனை விலை பெறக் காரணம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி போட்டி போட்டது தான். இரண்டு அணிகளும் நல்ல வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் வேண்டும் என்ற முடிவில் இருந்ததால் கடும் போட்டி நிலவியது.

ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி 20 கோடி விலை கேட்டது. அப்போது அனைவரும் கை தட்டினர். இதுவரை ஐபிஎல் ஏலத்தில் இத்தனை விலை போனதில்லை என்பதால் பெரும் பரபரப்பு எழுந்தது. அப்போது சன்ரைசர்ஸ் அணியின் காவ்யா மாறன் விடாப்பிடியாக இருந்து 20.50 கோடிக்கு விலை கேட்டார். வேறு யாரும் அதற்கு மேல் கேட்க முன் வராத நிலையில் சன்ரைசர்ஸ் அணி பாட் கம்மின்ஸ்-ஐ வாங்கியது. பாட் கம்மின்ஸ்-ஐ கேப்டனாகவும் ஆக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது.

முன்னதாக சன்ரைசர்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட்டை வாங்கி இருந்தது. அவரை 6.80 கோடிக்கு வாங்கி இருந்தது. இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களை மட்டுமே 27.30 கோடிக்கு வாங்கி இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. டேவிட் வார்னரை அந்த அணி நீக்கியது தவறான முடிவு என பலரும் முன்பு கூறிய நிலையில், செய்த தவறை சரி செய்ய அந்த அணி மீண்டும் ஆஸ்திரேலிய வீரர்கள் பக்கம் சாய்ந்து இருப்பதாக தெரிகிறது.

Story first published: Tuesday, December 19, 2023, 14:28 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+