Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி அணியின் மும்மூர்த்திகள்.. 2 பேருக்கு 20 கோடிக்கு மேல் சம்பளம்.. பெஸ்ட் வீரரை ஏன் யாரும் வாங்கல?

துபாய் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர்களை பல அணிகளும் பல கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த மும்மூர்த்திகள் இன்று அழைக்கப்படும் வீரர்களில் இரண்டு பேர் அதிக விலைக்கு சென்று இருக்கிறார்கள்.

இதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்சை 20 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஹைதராபாத் அணியும் ஏலத்தில் ஸ்டார்க்கை 24 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து கே கே ஆர் அணியும் வாங்கியுள்ளது

IPL auction 2024 - Why Australian star fast bowler Josh Hazlewood goes unsold

ஆனால் இந்த மும்மூர்த்திகளிலே சிறந்த வீரர் என்றால் அது ஜாஸ் ஹேசல்வுட் தான். டி20 ,ஒருநாள் டெஸ்ட் என எந்த கிரிக்கெட் போட்டிகளாக இருந்தாலும் சரி கட்டுக்கோப்பாக ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பதில் ஜோஸ் ஹேசல்வுட் சிறப்பான வீரராக திகழ்ந்தார்.
இந்த நிலையில் அவரை ஆர் சி பி ஐ விடுவித்ததே பெரிய சந்தேகமாக இருந்தது.

இந்த நிலையில் அவரை ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஹேசல்வுட் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அனுபவம் உடையவர். இதனால் மற்ற இரண்டு வீரர்களைப் போலவே ஜோஸ் ஹேசல்வுட் மட்டும் அதிக விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் அவர் பெயர் வந்ததும் எந்த அணியும் அவரை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இதனால் ஹேசல்வுட் விலை போகாத வீரராக அறிவிக்கப்பட்டார். ஹேசல்வுட்டை ஏன் விலைக்கு வாங்கவில்லை என ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலை அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ஹேசல்வுட் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போகிறார்.

இதன் காரணமாக ஹேசல்வுட் மே மாதம் முதல் வாரத்தில் தான் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இந்தியா வருவாராம். இதனால் அவர் இல்லாமல் முதல் பாதியை சமாளிக்க எந்த ஒரு அணியும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக ஹேசல்வுட்டை யாரும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவர் மீண்டும் ஐபிஎல் போட்டிக்குள் மாற்று வீரராக வர வாய்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, December 19, 2023, 17:38 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+