Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம்- பும்ராவுடன் இணைந்த ஏமன்! இனி மும்பை அணியை யாராலும் அசைக்க முடியாது.. யாக்கர் கிங் பராக்

மும்பை : ஐபிஎல் தொடர் வரலாற்றிலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் ஃபைனலுக்கு கூட செல்ல முடியாமல் தடுமாறி வருகிறது.

இதனால் கேப்டனை எல்லாம் மாற்றி மும்பை அணி கடந்த சீசனில் களம் கண்டு படுதோல்வியை தழுவியது. இந்த நிலையில் மும்பை அணி இம்முறை எப்படியாவது பலமான அணியை கட்டமைக்க வேண்டிய உத்வேகத்தில் களமிறங்கியுள்ளது.

ipl auction 2025 ipl auction mumbai indians trent boult 2025


மும்பை அணியில் ஏற்கனவே அதிரடி வீரர்கள் பலரும் இருந்தாலும், அந்த அணியின் பந்து வீச்சில் மிகப்பெரிய குறை இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ட்ரெண்ட் பவுல்ட் மற்றும் பும்ரா ஆகியோர் ஏற்கனவே இருந்த நிலையில், மும்பை அணி தங்களுடைய யுக்தியை மாற்றி டிரண் பவுல்டை வெளியே அனுப்பி ஜோப்ரா ஆர்ச்சரை வாங்கியது. ஆனால் ஜோசரா ஆர்சர் காயம் காரணமாக சரிவர விளையாட முடியவில்லை.

இதனால் மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. பும்ரா தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவு பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுமாறி வந்தனர். இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஏலத்தில் ட்ரெண்ட் பவுல்டை 12 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதன் மூலம் மும்பை அணியின் பந்துவீச்சு மீண்டும் வளம் பெற்றிருக்கிறது. இவ்விருவரும் பவர் பிளேவில் பந்து வீசினால் நிச்சயம் எதிரணி பேட்ஸ்மேன்கள் பரதநாட்டியம் ஆடப்படுவது உறுதி.

அந்த அளவுக்கு இருவரும் கட்டுக்கோப்பாக பந்து வீசுவார்கள். டிரண்ட் பவுல்ட்க்கு வயதாகிவிட்டது என்றாலும், அவர் அதே ஃபார்மில் தான் இருக்கின்றார். சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடாததால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடர் முழுவதும் அவர் இருப்பார். இதன் காரணமாக ட்ரெண்ட் பவுல்ட் வருகையை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதை போன்று மும்பை அணியை பார்த்து மற்ற அணி ரசிகர்களும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

Story first published: Sunday, November 24, 2024, 22:27 [IST]
Other articles published on Nov 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+