Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம் 2026: கடைசி நேரத்தில் வந்த 19 வீரர்கள்.. அபிமன்யு ஈஸ்வரனுக்கு ஜாக்பாட் அடிக்குமா?

அபுதாபி: ஐபிஎல் 2026 மினி ஏலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அபுதாபியில் நடைபெறவுள்ளது. பத்து ஐபிஎல் அணிகளும் வீரர்களை வாங்கத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், பிசிசிஐ கடைசி நேரத்தில் ஒரு அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. ஏலப் பட்டியலில் திடீரென 19 புதிய வீரர்களைச் சேர்த்துள்ளது. இதனால் ஏலத்தில் பங்கேற்கும் மொத்த வீரர்களின் எண்ணிக்கை 350-லிருந்து 369-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாகச் சேர்க்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பெயர் அபிமன்யு ஈஸ்வரன். வங்காள அணியின் தொடக்க வீரரான இவர், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தும், இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான இவருக்கு ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு அணி இவரைத் தட்டித் தூக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

IPL Auction 2026 19 New Players Added Last Minute Will Abhimanyu Easwaran Get a Bid

வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு

இந்திய வீரர்களைத் தவிர, சில முக்கிய வெளிநாட்டு வீரர்களும் இந்தப் புதிய பட்டியலில் இணைந்துள்ளனர்.

பென் சியர்ஸ் : நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர். (அடிப்படை விலை: ரூ.1.50 கோடி).

ஈதன் போஷ் : தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் மற்றும் கார்பின் போஷ்ஷின் சகோதரர். (அடிப்படை விலை: ரூ.75 லட்சம்).

கிறிஸ் கிரீன் : ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர். (அடிப்படை விலை: ரூ.75 லட்சம்).

கைல் வெரைன் : தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர். (அடிப்படை விலை: ரூ.1.25 கோடி).

பிளெஸ்ஸிங் முசரபானி: ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர்.

புதிதாகச் சேர்க்கப்பட்ட 19 வீரர்கள் மற்றும் அவர்களின் அடிப்படை விலை:

மணிசங்கர் முராசிங் (இந்தியா) - ரூ. 30 லட்சம்
ஸ்வஸ்திக் சிகாரா (இந்தியா) - ரூ. 30 லட்சம்
ஈதன் போஷ் (தென்னாப்பிரிக்கா) - ரூ. 75 லட்சம்
விரன்தீப் சிங் (மலேசியா) - ரூ. 30 லட்சம்
சாமா மிலிந்த் (இந்தியா) - ரூ. 30 லட்சம்
கே.எல். ஸ்ரீஜித் (இந்தியா) - ரூ. 30 லட்சம்
ராகுல் ராஜ் நமலா (இந்தியா) - ரூ. 30 லட்சம்
கிறிஸ் கிரீன் (ஆஸ்திரேலியா) - ரூ. 75 லட்சம்
விராட் சிங் (இந்தியா) - ரூ. 30 லட்சம்
அபிமன்யு ஈஸ்வரன் (இந்தியா) - ரூ. 30 லட்சம்
திரிபுரேஷ் சிங் (இந்தியா) - ரூ. 30 லட்சம்
கைல் வெரைன் (தென்னாப்பிரிக்கா) - ரூ. 1.25 கோடி
பிளெஸ்ஸிங் முசரபானி (ஜிம்பாப்வே) - ரூ. 75 லட்சம்
பென் சியர்ஸ் (நியூசிலாந்து) - ரூ. 1.50 கோடி
ராஜேஷ் மொஹந்தி (இந்தியா) - ரூ. 30 லட்சம்
ஸ்வஸ்திக் சமால் (இந்தியா) - ரூ. 30 லட்சம்
சரண்ஷ் ஜெயின் (இந்தியா) - ரூ. 30 லட்சம்
சூரஜ் சங்கராஜு (இந்தியா) - ரூ. 30 லட்சம்
தன்மய் அகர்வால் (இந்தியா) - ரூ. 30 லட்சம்

இன்று நடைபெறும் ஏலத்தில் 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 77 இடங்களை நிரப்ப வேண்டும். இதில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானவை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்சமாக 13 இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.

கேமரூன் கிரீன், லியம் லிவிங்ஸ்டோன், ரவி பிஷ்னாய் போன்ற பெரிய தலைகளுக்குக் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, December 16, 2025, 10:33 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+