Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2026: அதிகபட்ச விலைக்கு 45 வீரர்கள் தேர்வு.. மினி ஏலத்தில் 1355 வீரர்கள் பெயர் பதிவு

மும்பை:2026 ஐபிஎல் ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மெகா ஏலத்தில் 77 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இது மினி ஏலத்திற்காக மொத்தம் 1,355 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் நேற்று உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொண்டது.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்பதால், இந்த ஏலத்தில் மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் 31 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் அடங்கும். டிசம்பர் 5 ஆம் தேதிக்குள், அனைத்து 10 உரிமையாளர்களும் இந்தப் பட்டியலில் தங்களுக்கு எந்த வீரர்கள் ஏலத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கும், அதன் பிறகு, இந்த பட்டியல் ஐபிஎல் நிர்வாகத்தால் குறைக்கப்படும்.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீது இந்த ஏலத்தில் முக்கிய கவனம் இருக்கும். காயம் காரணமாக 2025 மெகா ஏலத்தில் பங்கேற்காத இவர், இந்த முறை பெரும் தொகையைப் பெற வாய்ப்புள்ளது. அதிகபட்ச பர்ஸ் தொகையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வைத்துள்ளது. கேகேஆர் இடம் 64.3 கோடி ரூபாய் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43.4 கோடி ரூபாயும் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் டி20 ஜாம்பவான் ஆண்ட்ரே ரஸில் ஐபிஎல் ஓய்வை அறிவித்த பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரீனை வாங்க முயற்சி செய்யலாம். கிரீன் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் இறங்கி அடித்து ஆடக்கூடியவர், வேகப்பந்துவீச்சில் முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்டததக் கூடியவர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 வீரர்களை விடுவித்துள்ளது, இதில் கடந்த மெகா ஏலத்தில் 23.5 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் அடங்குவார். அவர்களுக்கு 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளன, இதில் ஆறு வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் அடங்கும்.

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஒன்பது இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. இந்த அணிகளும், வலுவான ஆல்-ரவுண்டர்களைத் தேடும் என்பதால், கிரீனை வாங்க ஆர்வம் காட்டலாம். சமீபத்தில் விடுவிக்கப்பட்ட பல வீரர்கள் அதிக அடிப்படை விலைப் பிரிவில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இதில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரனாவும் அடங்குவார். கடந்த ஆண்டு ₹13 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட இவர், எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை என்பதால் விடுவிக்கப்பட்டார்.

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் ₹8.75 கோடிக்கு மெகா ஏலத்தில் வாங்கப்பட்டார். அவர் கடந்த சீசனில் ஏமாற்றம் தந்தததால் நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவரும் தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார். ரூ. 2 கோடி அடிப்படை விலைப் பட்டியலில் இந்திய வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர்.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பெயர் இல்லை. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ₹4.2 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், மோசமான வகையில் செயல்பட்டதால் விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் போலவே, ஐபிஎல்லுக்குப் பதிலாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட முடிவு செய்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற ஆஸ்திரேலிய வீரர், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஸ் தனது பெயரை 2 கோடி ரூபாய் பட்டியலில் பதிவு செய்துள்ளார்.

₹2 கோடி அடிப்படை விலையின் கீழ் உள்ள வீரர்கள்: ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் ஐயர், முஜிப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், சீன் அபோட், ஆஷ்டன் அகர், கூப்பர் கோனோலி, ஜேக் ஃப்ரேசர்-மெகர்கர்க், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், முஸ்தஃபிசுர் ரஹ்மான், குஸ் அட்கின்சன், டாம் பான்டன், டாம் கரண், லியாம் டவ்சன், பென் டக்கெட், டான் லாரன்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டைமல் மில்ஸ், ஜேமி ஸ்மித், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், ரச்சின் ரவீந்திரா, ஜெரால்ட் கோட்ஸி, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ரிலீ ரூசோ, தப்ரைஸ் ஷம்சி, டேவிட் வைஸ், வனிந்து ஹசரங்கா, மதீஷ பதிரனா, மஹேஷ் தீக்ஷனா, ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கீல் ஹொசைன், அல்சாரி ஜோசப்.

Story first published: Tuesday, December 2, 2025, 11:14 [IST]
Other articles published on Dec 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+