Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படிங்க இது சாத்தியம்..? IPL ல் மும்பைக்காக விளையாடுவதை 8 ஆண்டுக்கு முன் கணித்த ஆர்ச்சர்..

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி வாங்கியது.

Recommended Video

Jofra Archer’s Old Tweet Goes Viral After Mumbai Indians Buy Him For 8 Crores In Auction

இந்த சீசனில் அவர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்றாலும், அடுத்த ஆண்டு விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பும்ரா, ஆர்ச்சர் என மும்பை வேகப்பந்துவீச்சின் பலம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் நேற்று ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.

உலககோப்பை கணிப்பு

உலககோப்பை கணிப்பு

கிரிக்கெட் உலகின் தீர்க்கதரிசியாக விளங்க கூடியவர் இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆம், இன்று நடக்கப்போவதை தனது ட்வீ ட் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிடுவார். 2019ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் வரும் என்று யார் கணித்து இருப்பார்.

ரெய்னா ஓடாதீர்

ரெய்னா ஓடாதீர்

ஆனால் ஆர்ச்சர், 2015ஆம் ஆண்டே இது தொடர்பாக ட்வீ ட் போட்டுள்ளார். மேலும் சூப்பர் ஓவரில் எவ்வளவு ரன் தேவைப்படும்என்பதை 16 From 6 என்று பல ஆண்டுகளுக்கு முன் போட்டு இருந்தார். இதே போல் ரெய்னா 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய போது, அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ரெய்னா ஓடாதீர்கள் என்று ட்வீ ட் போட்டார்.

பூரான், கொரோனா எச்சரிக்கை

பூரான், கொரோனா எச்சரிக்கை

இதே போன்று 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எல்லைக் கோட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரான் பறந்து போய் கேட்ச் பிடித்தார். அதனை குறிக்கும் விதமாக பல ஆண்டுகளுக்கு முன் ட்வீ ட் போட்டு இருந்தார். Safe flight பூரான் என்று ட்வீ ட் போட்டு இருந்தார். இதே போன்று கொரோனா ஊரடங்கை குறிக்கும் விதமாக ஒரு நாள் ஒளித்து கொள்ள இடம் இருக்காது என்று குறிப்பிட்டு இருந்தார்.

மும்பை அணி கணிப்பு

மும்பை அணி கணிப்பு

இந்த நிலையில் ஆர்ச்சர் மும்பை அணிக்கு விளையாடுவதை 8 ஆண்டுக்கு முன்பு, மும்பை U deserved it என்றும், மும்பையா அல்லது ராஜஸ்தானா என்றும் ட்வீ ட் போட்டு இருந்தார். அதே போல், இவரை ஏலத்தில் எடுக்க மும்பையும், ராஜஸ்தான் அணியும் கடும் போட்டி போட்டது. இவர் உண்மையிலேயே நடப்பதை முன் கூட்டியே போடுகிறாரா இல்லை, இவர் போடும் ட்வீ ட் பின்னர் நடைபெறும் சம்பவங்களுக்கு ஏதேச்சையாக ஒத்து போகிறதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Story first published: Monday, February 14, 2022, 9:39 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+