Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம்.. நன்றி மறக்காத ஹர்த்திக் பாண்டியா... ரசிகர்கள் பாராட்டும் உருக்கமான செயல்!

சென்னை: ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறும் வேளையில், அதற்காக ஹர்த்திக் பாண்டியா செய்துள்ள ட்விட்டர் பதிவு வரவேற்பை பெற்று வருகிறது.

14வது ஐபிஎல் தொடரின் ஏலம் சென்னையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. திறமையான இளம் வீரர்களை கண்டறிய அணிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி மூலம் அறிமுகமாகி இன்று உலக புகழ் பெற்ற வீரராக திகழும் ஹர்த்திக் பாண்டியா ஐபிஎல் ஏலம் தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல்

ஐபிஎல்

ராஞ்சி போட்டி மற்றும் இந்திய A அணி போட்டிகளால் மட்டுமே இந்திய அணிக்குள் வீரர்கள் நுழைய முடியும் என்ற சூழல் இருந்த நிலையில், இளம் திறமைசாளிகளை கண்டறிய ஐ.பி.எல் உள்நாட்டு தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் விளையாடிய பல வீரர்கள் இன்று சர்வதேச போட்டிகளில் ஜொலித்து வருகின்றனர்.

நன்றி மறக்காத பாண்டியா

நன்றி மறக்காத பாண்டியா

ஐபிஎல் தொடரின் ஏலம் இன்று நடைபெறுகிறது. இதனிடையே முன்னணி வீரர் ஹர்த்திக் பாண்டியா ஏலம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், உங்கள் லட்சியங்களை என்றும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஐபிஎல் ஏலம் எனக்கும் என் சகோதரனுக்கும் நாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதை நினைவுக்கூறுகிறது என தெரிவித்துள்ளார்.

பாண்டியா பிரதர்ஸ்

பாண்டியா பிரதர்ஸ்

ஐபிஎல் போட்டி மூலம் உலக அரங்கில் பிரபலமடைந்தவர்களில் ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா முக்கியமானவர்கள். இவர்கள் இருவரையும் கடந்த 2015ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி ஆரம்ப விலையான ரூ.10 லட்சத்திற்கு வாங்கியது. இன்று வரை இவர்கள் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

பிரபலம்

ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டும் ஹர்த்திக் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக 57 ஒரு நாள் போட்டி, 43 டி20 மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதே போல க்ருணால் பாண்டியா 18 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

Story first published: Friday, February 19, 2021, 8:28 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+