Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction - மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்.. அம்பானி படையின் பலம், பலவீனம் என்ன?

மும்பை : ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே அதிக முறை கோப்பையை வாங்கி இருக்கும் அணி என்றால் அது சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிதான். சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவன் 2025 ஆம் ஆண்டு சீசனில் எப்படி இருக்கும் என்பதை கடந்த செய்தியில் நாம் பார்த்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் மெகா ஏலம் முடிவில் எவ்வாறு இருக்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்திற்கு முன்பே 5 ஸ்டார் வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் பெரிய அளவு குறையாமல் இருக்கிறது. சூரிய குமார் யாதவ், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா திலக் வர்மா, பும்ரா என ஸ்டார் வீரர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள்.

ipl auction 2025 rohit sharma 2025

இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த சில குறைகளை அவர்கள் நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறார்கள்.முதலில் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவுடன், வில் ஜாக்ஸ் களமிறங்க கூடும். அதிரடி வீரராக விளங்கும் வில் ஜாக்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். மூன்றாவது வீரராக திலக் வர்மா விளையாடக் கூடும்.

நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ், ஐந்தாவது வீரராக ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடுவார்கள். ஆறாவது வீரராக ரியான் ரிக்கல்டன் விளையாடக் கூடும். ஏழாவது வீரராக நமன் தீர் விளையாடலாம். எட்டாவது வீரராக மிட்செல் சாண்டனரும், ஒன்பதாவது வீரராக டிரெண்ட் பவுல்ட், பத்தாவது வீரராக தீபக்சாகர், பதினோராவது வீரராக பும்ரா ஆகியோர் விளையாடக்கூடும்.

இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் வேண்டுமென்றால் இம்பேக்ட் வீரராக அல்லாஹ் கசன்ஃபர் என்ற சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்திக் கொள்ளலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. தற்போதைய அணியில் டிம் டேவிட், கேமரா கிரீன் அல்லது போலார்ட் போன்ற பினிஷர்கள் தற்போது இருக்கும் மும்பை அணியில் இடம்பெறவில்லை. மேலும் மும்பை அணியின் பலமே வெளிநாட்டு ஆல் ரவுண்டர்கள் இருப்பது தான்.

ஆனால் தற்போதுள்ள அணியில் அப்படி எந்த ஒரு ஆல்ரவுண்டரும் கிடைக்கவில்லை. இதனால் தான் மும்பை அணி ராஜ் பவா, தீபக்சாகர் போன்ற வீரர்களை அணியில் சேர்த்து இருக்கிறது. இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை மிச்சல் சாட்னரை நம்பி தான் இருக்கிறது. ஷார்ட்நர் நல்ல வீரராக இருந்தாலும், அவர் இதுவரை பெரிய அளவில் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது. அதுவும் வான்கடே மைதானத்தில் அவர் அதிக ரன்கள் கொடுக்க வாய்ப்பு இருக்கின்றது.

அஸ்வின், சாகல் போன்ற ஒரு வீரரை மும்பை அணி மிஸ் செய்கிறது. பலம் என்று பார்த்தால் மும்பை அணியின் டாப் ஆர்டர் செமயாக இருக்கின்றது. தொடக்க வீரர்கள், நடு வரிசை என மும்பை அணியை சமாளிப்பது கடினமாக இருக்கும். இதேபோன்று வேக பந்து வீச்சிலும் டிரெண்ட் பவுல்ட், தீபக்சாகர், பும்ரா, ரீஸ் டோப்லி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இன்னும் மும்பை அணையில் ஸ்டார் வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால், அது மிகப்பெரிய பின்னடைவு அவர்களுக்கு தரும். ஏனென்றால் அவர்களை மாற்றக்கூடிய ஸ்டார் வீரர்கள் யாரும் அணியின் இல்லை.

Story first published: Tuesday, November 26, 2024, 6:30 [IST]
Other articles published on Nov 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+