
ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம்
அடுத்த 5 ஆண்டுகளுக்கான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான உரிமை ரூ.44,075 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.23,575 கோடிக்கும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் வியாகாம் 18 நிறுவனம் ரூ.20,500 கோடிக்கும் வாங்கியது. இது கடந்த 5 ஆண்டுகளை விடவும் 2 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

பிசிசிஐ புதிய திட்டம்
இந்நிலையில் அடுத்ததாக வீரர்களின் சம்பளத்திலும் கைவைத்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் தொடரின் பண மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுவிட்டதால், ஏலத்தில் வீரர்களை வாங்குவதற்கான தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ரூ.90 கோடி என உள்ள உச்சபட்ச வரம்பை ரூ.120 - 130 கோடி வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

அணி நிர்வாகங்கள் அதிருப்தி
இதற்காக பிசிசிஐ சார்பில் அணி நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அணிகள் ஒப்புதல் வழங்கிவிட்டால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். இதன் மூலம், ஒரு வீரரின் அதிகபட்ச சம்பளத் தொகை ரூ.20 முதல் ரூ.22 கோடி வரை கூட செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அணி நிர்வாகங்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்திருப்பதாகவும், கூடுதல் பணம் செலவழிக்க தயாராக இல்லை எனவும் தெரிகிறது.
Recommended Video

பரிசுத்தொகை அதிகரிப்பு
இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வெற்றியாளரின் பரிசுத்தொகையும் அதிகரிக்கப்படவுள்ளது. நடப்பாண்டு வெற்றியாளரான குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 20 கோடி பரிசாக பெற்றது. இந்த தொகையானது 25% வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications