Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லில் சூதாட்டத்திற்கு அணுகப்பட்ட "முக்கிய" வீரர்.. டிராக்கிங்கை தொடங்கிய பிசிசிஐ.. திருப்பம்!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் அதிரடி திருப்பமாக தற்போது முக்கியமான வீரர் ஒருவர் சூதாட்டத்திற்கு அணுகப்பட்டதாக தகவல்கள் வருகிறது.

ஐபிஎல் 2020 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு திருப்பங்கள் மற்றும் அதிரடி மாற்றங்களுடன் தொடர்ந்து நடந்து வருகிறது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வருடம் ராஜஸ்தான், டெல்லி, பெங்களூர் போன்ற அணிகள் சிறப்பாக ஆடி வருகிறது. மாறாக வலுவான ஹைதராபாத், சென்னை போன்ற அணிகள் திணற தொடங்கி உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில்தான் ஐபிஎல் 2020 தொடரில் அதிரடி திருப்பமாக தற்போது முக்கியமான வீரர் ஒருவர் சூதாட்டத்திற்கு அணுகப்பட்டதாக தகவல்கள் வருகிறது. இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித் சிங் பேட்டி அளித்துள்ளார். இவர் முன்னாள் போலீஸ் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி

பேட்டி

இவர் அளித்துள்ள பேட்டியில், ஐபிஎல் தொடரில் முக்கியமான வீரர் ஒருவரை சூதாட்டம் செய்ய சூதாட்டக்காரர்கள் அணுகி உள்ளனர். அந்த வீரரின் விவரங்களை தெரிவிக்க முடியாது. அந்த வீரரை நேரடியாக அணுகி இந்த முயற்சியை சூதாட்டக்காரர்கள் செய்யவில்லை.

பயோ பபுள்

பயோ பபுள்

அந்த வீரரை சூதாட்டக்காரர்கள் ரகசியமாக அணுகி உள்ளனர். ஆனால் இதில் பயோ பபுள் விதிகள் எதுவும் மீறப்படவில்லை. இவர் எப்படி அணுகப்பட்டார் என்றும் கூற முடியாது. ஆனால் அந்த முக்கிய வீரர் இந்த சூதாட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

தெரிவித்தார்

தெரிவித்தார்

அந்த குறிப்பிட்ட வீரர் துரிதமாக செயல்பட்டு உடனே ஐபிஎல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார். ஐபிஎல் நிர்வாகம் உடனடியாக பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்தது. அந்த குறிப்பிட்ட வீரர் விதிமுறைப்படி செயல்பட்ட சரியாக முடிவு எடுத்து உள்ளார். அவரை பாராட்டுகிறோம். அவர் சந்தேகம் சரியானதுதான்.

மோசம்

மோசம்

அந்த வீரரை அணுகிய சூதாட்ட நபர்களை தேடி வருகிறோம். அவர்களை டிராக் செய்து வருகிறோம். விரைவில் பிடித்துவிடுவோம். நிறைய சூதாட்ட குழுக்கள் வீரர்களை இப்படி அணுக முயற்சித்து வருகிறது. இவர்களிடம் வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 4, 2020, 13:07 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+