Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல், சி.சி.எல்... அடுத்து வருது சின்னத்திரை கிரிக்கெட்

சென்னை: ஐ.பி.எல், சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.பி.எல்., கிரிக்கெட் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. ஊழல் புகார் வந்தாலும் 7 சீசன்வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்து திரைப்பட நட்சத்திரங்கள் தொடங்கிய சி.சி.எல்., என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

சினிமா திரை நட்சத்திரங்கள்

சினிமா திரை நட்சத்திரங்கள்

2010-ஆம் வருடம் தொடங்கப்பட்ட சிசிஎல் தற்போது வெற்றிகரமாக 5 ஆவது சீசனை நிறைவு செய்திருக்கிறது.

நட்சத்திர கொண்டாட்டம்

நட்சத்திர கொண்டாட்டம்

தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தித் திரையுலகினர் மட்டுமே விளையாடிய சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் தற்போது மராத்தி, போஜ்பூரி மொழியைச் சேர்ந்த திரைப்படத்துறையினரும் இணைந்து விளையாடி வருகின்றனர்.

டிவி சேனல்களில் லைவ்

டிவி சேனல்களில் லைவ்

சிசிஎல் விளையாட்டுப்போட்டியை பல்வேறு சேனல்கள் லைவ்வாக ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்ததும், ஐபிஎல் போலவே சிசிஎல்லுக்கும் ரசிகர்கள் கூட்டம் கணிசமான அளவுக்குஅதிகரித்துவிட்டது.

சின்னத்திரை நட்சத்திரங்கள்

சின்னத்திரை நட்சத்திரங்கள்

இதை எல்லாம் பார்த்ததும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் கிரிக்கெட் விளையாட ஆசை வந்திருக்கிறது. எனவே சின்னத்திரை நட்சத்திரங்களில் யார் யாருக்கு எல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது என்று கேட்டு பட்டியல் தயாரித்து வருகின்றனர்.

தெலுங்கு டீம் ரெடி

தெலுங்கு டீம் ரெடி

தெலுங்கில் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஏற்கனவே கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். தமிழில் அதேபோல ஆர்வமுள்ள நட்சத்திரங்களைக் கொண்டு அணியை ரெடி செய்ய உள்ளனர்.

தென்னிந்திய டிவி நட்சத்திரங்கள்

தென்னிந்திய டிவி நட்சத்திரங்கள்

அணி தயாரான பிறகு, தெலுங்கு, மலையாள, கன்னட, ஹிந்தி சின்னத்திரை கலைஞர்களுடன் கலந்து பேசி சின்னத்திரை கிரிக்கெட் போட்டியை தொடங்க இருக்கின்றனர்.

Story first published: Friday, January 16, 2026, 19:11 [IST]
Other articles published on Jan 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+