For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 ஆண்டு தடைக்கு பிறகு சாதித்த சிஎஸ்கே.. 2018 ஐபிஎல் பைனலில் சன்ரைசர்ஸ் அணியை துவம்சம் செய்த வாட்சன்

சென்னை : 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். ஐபிஎல் தொடரில் 2 ஆண்டு தடைக்கு பிறகு வந்த சிஎஸ்கே அணி, மே 27ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இறுதி ஆட்டத்தில் மும்பை வான்கேடே ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது.

தோனி டாஸ் ஜெயித்து, பீல்டிங் செய்ய முடிவு செய்தார்.வருடா வருடம் ஐ பி எல் மேட்சுக்கள் எதிர் பார்ப்பை கூட்டிக் கொண்டே செல்கின்றன.இந்த பைனலும் விதிவிலக்கு இல்லை.இரண்டு டீம்களும் சம பலத்துடன் காணப் பட்டன.ஆரம்பமே நோ பாலில் துவங்கியது. தவான் , கோஸ்வாமி இருவரும் ஹைதராபாத் டீமிற்கு துவக்கம் அளித்தனர்.

IPL classic matches - 2018 Final How CSK Beat SRH to claim Redemption

சஹர் பவுலிங் செய்தார்.
முதல் ஓவர் ஸ்கோர்
6 / 0

தவான் 2 கோஸ்வாமி 3

இரண்டாவது ஓவர் நிகிடி பவுல் செய்தார்.
இந்த ஓவரில் முதல் 4 அடித்தது தவான். பந்தை தடுக்க சென்ற வீரரின் பின்னங்கால் பவுண்டரி கோட்டை தொட்டுக் கொண்டு இருந்ததால் கிடைத்தது நான்கு ரன்கள்.
முதல் விக்கெட்டும் இந்த ஓவரில் கிடைத்தது. கோஸ்வாமி ரன் அவுட். 5 ( 5 பந்துக்கள்.)

இரண்டாவது ஓவர் முடிவில் ஸ்கார் 14 / 1
வில்லியம்சன் 1
தவான் 7

ரன்கள் 3 கூடின.

நான்காவது ஓவர் போட்டது நிகிடி.
அருமையாக பந்து வீசினார். எதிர் கொண்டவர் வில்லியம்சன். ஆறு டாட் பந்துக்கள். முதல் மெய் டன் ஓவர்.

இந்த ஓவர் முடிவில் ஸ்கோர் 17 / 1

வில்லியம்சன் 3
தவான் 8

5 ஓவர் முடிவில் ஸ்கோர்
30 / 1

வில்லியம்சன் 14
தவான் 9

கடந்த நிகிடி ஓவரில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் ஆடிய வில்லியம்சன், இந்த சஹர் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியும் அடித்து அசத்தினார்.தாகூர் வீசிய அடுத்த ஓவர் 12 ரன்கள் சேர்க்க உதவியது, ஒரு சிக்ஸர் உட்பட. அடித்தது தவான்.
கரண் வீசிய டீமின் 7 வது ஓவரின் 5 வது பந்து 4 ரன்கள் கிடைக்க வழி வகுத்தது. டீப் ஸ்கோயர் லெக்கில் அடித்தார், தவான்.

ஓவரின் முடிவில் டீமின் ஸ்கோர் 51 / 1

வில்லியம்சன் 18
தவான் 24

8 வது ஓவர் எஸ் ஆர் எச் டீமிற்கு சாதகமாக அமைந்தது. பவுலர் பிராவோ. இந்த ஓவரின் 5 ஆம் பந்து கவர் பவுண்டரி கோட்டை தாண்டி சென்றது. கடைசி பந்து புல் டாஸ். சிக்ஸராக போய் விழுந்தது.இரண்டு முறையும் விளாசியவர் கேன் வில்லியம்சன்.

8 வது ஓவர் முடிவில்
62 / 1

வில்லியம்சன் 28
தவான் 25

அடுத்த ஓவர் பவுலிங் செய்தவர் ஜடேஜா. 3 வது பந்தில் போல்ட் ஆனவர் ஷிகார் தவான்.
26 ( 25 பந்துக்கள். 2 x 4 & 1 x 6 )பேட்டிங் செய்ய வந்த ஷாகிப் முதல் பந்தை அட்டகாசமாக கட் செய்ய அவருக்கு கிடைத்தது ஒரு பவுண்டரி.

ஓவர் முடிவில் ஸ்கோர் 70 / 2

வில்லியம்சன் 30
ஷாகிப் 5

10 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 73 / 2

வில்லியம்சன் 32
ஷாகிப் 6

11 வது ஓவர் போட்டது ஜடேஜா. 17 ரன்கள் சேர்ந்தன. வில்லியம்சன் ஒரு பவுண்டரி அடிக்க, ஷாகிப் ஒரு மிக பெரிய சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்து சரியாக படாமல் பவுண்டரி தான் கிட்டியது, ஷாகிப்புக்கு.

ஸ்கோர் 90 / 2

வில்லியம்சன் 37
ஷாகிப் 17

பிராவோ வீசிய ஓவரில் அடுத்து அடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கேன் வில்லியம்சன். முதல் பவுண்டரி பாயிண்ட் மற்றும் எக்ஸ்ட்ரா கவருக்கு இடையில் பாயந்து சென்றது. இரண்டாவது பவுண்டரி மிட் விக்கெட் பகுதிக்கு சென்றது.

அடுத்த ஓவரில் கரண் போட்ட முதல் பந்து முதல் விக்கெட்டை பெற்று தந்தது. ஸ்டும்பிங் செய்தது தோனி. அவுட் ஆனது கேன் வில்லியம்சன்.
47 ( 36 பந்துக்கள். 5 x 4 & 2 x 6 )

அடுத்து பேட்டிங் செய்ய வந்த பத்தான் ஒரு பவுண்டரி அடித்தார்.

13 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 108 / 3.

பத்தான் 7
ஷாகிப் 18

15 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 126 / 3

பத்தான் 22
ஷாகிப் 21

இந்த ஓவரில் ஒரு சிக்ஸர் பறந்தது. முதல் பந்தைப் போலவே ஆப் ஸ்டும்புக்கு மிகவும் வெளியே இரண்டாவது பந்தும் சென்றது. பத்தான் நன்றாக நகர்ந்து சென்று ஒரு சாத்து சாத்தினார். ரசிகர்களால் நம்ப முடியவில்லை, எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் பந்து சென்று சிக்சராக முடிந்தது.

16 வது ஓவரில் விக்கெட் விழுந்தது. பிராவோ வீசிய பந்தை ஷாகிப் நன்றாகத்தான் அடித்தார். ஆனால் ரெய்னா புலி போல் பாய்ந்து பிடித்தார்.
முன்னதாக ஒரு பவுண்டரி அடிக்கப் பட்டது.
23 ( 15 பந்துக்கள். 2 x 4 & 1 x 6 )

16 வது ஓவர் ஸ்கோர்
134 / 4
ஹூடா 1
பத்தான் 27

ஒரு ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேலே எஸ் ஆர் எச் டீம் ஸ்கோர் செய்துக் கொண்டு இருந்தனர், இந்த தருணத்தில்.அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு விக்கெட்டையும் கண்டனர் ரசிகர்கள்.நிகிடி போட்ட பந்தை லாங் ஆன் பகுதிக்கு அனுப்பி வைத்தார்,
சிக்சராக பத்தான்.

ஓவரின் கடைசி பந்தில் ஹூடா அவுட். கேட்ச் பிடித்தது சப்ஸ்டிடியூட்
பீல்டர்.
3 ( 4 பந்துளைக்கள் )
ஸ்கோர் 144 / 5

18 வது ஓவரில் எடுக்கப்பட்ட ரன்கள் 16.
பிராவோ போட்ட இரண்டாவது பந்தை பிராவோவின் தலைக்கு மேல் பறக்க விட்டு 6 ரன்கள் பெற்ற பேட்ஸ்மன் பிராத்வைட். பவுண்டரி எடுத்தார் பத்தான்.

ஸ்கோர் 160 / 5

19 வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 168 / 5

பிராத்வைட் 15
பத்தான் 42

இந்த ஓவரின் 8 ரன்களில், ஒரு 6 ம் அடங்கும். நிகிடியின் கடைசி பந்து லாங் ஆன் பவுண்டரி லயனையும் தாண்டி விழுந்தது.பைனல் ஓவர். தாகுர் போட்டார். 10 ரன்கள்.5 வது பந்தை பிராத்வைட் அனுப்பி வைத்து 6 ரன்கள் கிடைக்கப் பெற்றார்.

கடைசி ஓவரின், கடைசி பந்து விக்கெட் பெற்றுக் கொடுத்தது. பிராத்வைட் அடிக்க போக பேட்டின் முனையில் பட்டு சுலபமான கேட்சை பிடித்தவர் ராயுடு.
21 ( 11 பந்துக்கள். 3 x 6 )

20 வது ஓவர் முடிவில் எஸ் ஆர் எச் டீம் ஸ்கோர் 178 / 6
பத்தான் 45*

சி எஸ் கே டீம் 6 பவுலர் கள் தலைக்கு ஒரு விக்கெட் எடுத்தார்கள்.

குறைந்த பந்துக்களில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்.

கேன் வில்லியம்சன் 47 (36 )
யூசுப் பத்தான் 45 * (25 )

பிராத்வைட் 21 (11 )

ஒரு ஓவருக்கு 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் சி எஸ் கே டீம் பேட்டிங் ஆட துவங்கினர். ஷனே வாட்சன், டுப்ளெஸ்ஸிஸ் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.எஸ் ஆர் எச் டீமின் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சை துவக்கினார்.
ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசிக்க காத்துக் கொண்டு இருந்தனர்.

முதல் ஓவரின் ஆறு பந்துக்களும் அருமையயாக வீசப் பட்டன. எல்லாம் டாட் பந்துக்களாக விழுந்தன. முதல் ஓவர் மெய்டன்.சந்தீப் போட்ட ஓவரில் 5 ரன்கள் எடுக்கப் பட்டன.
இரண்டாவது பந்து பவுண்டரிக்கு சென்றது.டு ப்ளெஸ்ஸிஸ் அடித்தார்.
இரண்டாவது ஓவர் முடிவில் ஸ்கோர் 5 / 0

ஷனே வாட்சன் 0
பப் டு ப்ளெஸ்ஸிஸ் 5

மூன்றாவது ஓவரின் முதல் நான்கு பந்துக்கள் எந்த ரன்னும் பெற்று தரவில்லை. இது வரையில் புவனேஸ்வர் குமார் வீசிய 10 பந்துக்களும் டாட் பந்துக்கள். புவனேஸ்வர் குமார் தனது அனுபவத்தை சிறப்பாக வெளிப் படுத்தினார். வேகத்தை மாற்றியும் , கட்டுப் படுத்தியும் எதிரணி வீரர்களை திணறடித்தார்.அடுத்த பந்தில் டு ப்ளெஸ்ஸிஸ் ஒரு ரன் எடுக்க முயலும் பொழுது ஹூடா பீல்ட் செய்த பந்தை வெகு வேகமாக தூக்கி அடிக்க பிடிக்க வீரர் இல்லாததால், ஓவர் த்ரோ ஆகி 5 ரன்கள் ஆயிற்று.

4 வது ஓவரில் கிடைத்த ரன்கள் 6. விழுந்த விக்கெட் 1.

ஓவரின் மூன்றாவது பந்தில் வாட்சன் பவுலர் சந்தீப்பை தாண்டி செல்லும் மாறு பந்தை அடித்தார். பவுண்டரி. ஓவரின் 6 வது பந்தில் பவுலரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் டு ப்ளெஸ்ஸிஸ்.

10 ( 11 பந்துக்கள். 1 x 4 )

ஸ்கோர் 16 / 1

புவனேஸ்வர் குமார் டீமின் 5 வது ஓவரை வீசினார். 4 ரன்கள்.

5 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 20 / 1
வாட்சன் 7. ரெய்னா 2

5 வது ஓவர் முடிவில் எஸ் ஆர் எச் டீமின் ஸ்கோர் 30 / 1 ஆக இருந்தது.

சந்தீப் போட்ட 6 வது ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்சரும் மிட் விக்கெட் திக்கில் அடித்தார். அடுத்த ஓவர் கவுள் பவுலிங் செய்தார். 16 ரன்கள் சேர்ந்தன. வாட்சன் ஒரு சிக்ஸர். ரெய்னா இரண்டு பவுண்டரிகள்.
அடுத்த ஓவர் ரஷீத் கான் போட்டார். 5 ரன்கள்.

9 வது ஓவர் வீசியவர் கவுள். கொடுத்தது 16 ரன்கள். லாங் ஆனில் ஒரு சிக்ஸர் சென்று இறங்கியது. அடித்தவர் வாட்சன். ஒரு பவுண்டரி வேறு. ஆறு பந்துக்களிலும் ரன்கள் வந்தன.

10 வது ஓவரில் 8 ரன்கள். பவுலர் ரஷீத் கான்.

ஸ்கோர் 80 / 1

இதே தருணத்தில் அவர்கள் ஸ்கோர் 73 / 2
ஆக இருந்தது.

ஷாகிப் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் வாட்சன் சிக்ஸர் அடித்தார். 50 ரன்களை கடந்தார்.
கடைசி பந்தில் தன் பங்கிற்கு ரெய்னா ஒரு சிக்ஸர் அடித்தார். அவர் அடித்த பந்து லாங் ஆன் பகுதியில் தஞ்சம் புகுந்தது. இந்த ஓவரில் கிடைத்த ரன்கள் 15.

ரசிகர்களுக்கு குஷி. சப்தம் காதுக்களை துளைத்தன. பிராத்வைட் போட்ட இந்த ஓவரின் ரன்கள் 9. சி எஸ் கே டீம் 100 ரன்களை கடந்தது.சந்தீப் வீசிய டீமின் 13 வது ஓவர் சி எஸ் கே டீம் மற்றும் எல்லா ரசிகர்களையும் மகிழ்ச்சி கொள்ள செய்தது.

இந்த ஓவரில் கிடைத்த ரன்கள் 27. சி எஸ் கே டீமிற்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்தது என்றால் மிகையாகாது.இரண்டு பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் வாட்சன் அடித்தார். அவர் மட்டும் 26 ரன்கள் எடுத்தார், இந்த ஓவரில். ஒரு ரன் வைடு.முதல் 4 லாங் ஆப்பில் கடைசி பந்தில் அடித்த 4 கல்லி , பாயிண்ட்க்கு இடையில் சென்றது.

ஓவரின் பந்துக்கள் 3, 4, 5 மூன்று சிக்ஸர்கள். லாங் ஆன், டீப் மிட் விக்கெட் வைட் லாங் ஆன் இடையில் (கவ் கார்னர் cow corner), மறு படியும் லாங் ஆன் திக்கில் சென்றன.
13 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 131 / 1

வாட்சன் 86 ரெய்னா 31

சி எஸ் கே வீரர்கள் வெற்றி அடைய வேண்டி உத்வேகத்துடன் விளையாடினார்கள்.
எஸ் ஆர் எச் டீம் தங்கள் பங்கிற்கு ஆட்டத்தில் ஈடுபாடுடன் விளையாடினார்கள்.
போட்டி அதிகரித்தது. எதிர் பார்ப்பு கூடியது.சி எஸ் கே விற்கு தேவை ஒரு ஓவரில் 7 ரன்களுக்கும் குறைவான ரன்கள். மீதி 7 ஓவர்கள் இருந்தன.

14 வது ஓவரில் பிராத்வைட் பந்தில் ரெய்னா அவுட். கோஸ்வாமி கேட்ச் பிடித்தார்.
32 ( 24 பந்துக்கள். 3 x 4 & 1 x 6 )
வாட்சன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார்.
இந்த ஓவரின் ரன்கள் 14. ஒரு விக்கெட்.
ஸ்கோர் 145 / 2
ராயுடு 1 வாட்சன் 97

ரஷீத் கான் மெய்டன் ஓவர் போட்டார். ராயுடுவால் ரன் எடுக்க முடியவில்லை. 6 டாட் பந்துக்கள்.

புவனேஸ்வர் குமார் மறுபடியும் பந்து வீச வந்தார். 8 ரன்கள். ஒரு 6. ராயுடு அடித்தார். லாங் ஆப் திசையில்.

17 வது ஓவர். ரஷீத் கான் பவுலர். 12 ரன்கள். வாட்சன் இந்த ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இரண்டு 4 வேறு அடித்தார்.
ஸ்கோர் 166 / 2

ராயுடு 10 வாட்சன் 108

கவுள் வீசினார் இந்த ஓவரை. 11 ரன்கள் கிடைத்தன. இரண்டு பவுண்டரிகள். எடுத்தவர் வாட்சன்.

18 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 177 / 2

பிராத்வைட் அடுத்த ஓவர் போட்டார். முதல் இரண்டு பந்துக்களுக்கு ரன் கிட்டவில்லை.
மூன்றாவது பந்து கவர் பகுதி வழியாக பவுண்டரி கோட்டை தாண்டியது. ஆட்டம் முடிவு பெற்றது.

வாட்சன் 117* ராயுடு 16*

புவனேஸ்வர் குமார் மிக சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்களில் ஒரு மெய் டன், 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.விக்கெட் எடுத்த சந்தீப் ஷர்மா ஒரு விக்கெட்டிற்கு 52 ரன்கள்
கொடுத்தார் 4 ஓவர்களில்.

2.3 ஓவர்கள் பந்து வீசிய பிராத்வைட் ஒரு விக்கெட் எடுத்தார். கொடுத்தது 27 ரன்கள்.
வாட்சன் 57 பந்துக்களில் எடுத்த ரன்கள் 117 ( 11 x 4 & 8 x 6 )விரு விருப்பாக நடந்த இந்த இறுதி மேட்சில் 19 சிக்ஸர்கள், 29 பவுண்டரிகள் பார்த்தவர்களை மகிழ செய்தன.
வாட்சன் ஆட்ட நாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ஒன்பது பந்துக்கள் வீச வேண்டியிருந்த நிலையில் 8 விக்கெடுக்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் , சன் ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் டீம்மை வென்று, ஐ பி எல் கோப்பையை பெற்றது.கொண்டாட்டம் தொடர்ந்தது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, March 13, 2024, 20:12 [IST]
Other articles published on Mar 13, 2024
English summary
IPL classic matches - 2018 Final How CSK Beat SRH to claim Redemption 2 ஆண்டு தடைக்கு பிறகு சாதித்த சிஎஸ்கே.. 2018 ஐபிஎல் பைனலில் சன்ரைசர்ஸ் அணியை துவம்சம் செய்த வாட்சன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+