IPL Classics- 144 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆர்சிபி.. கோலி, டிவில்லியர்ஸ் சதம்..குஜராத் படுதோல்வி
ஆர் சி பி அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்றால் நம்ப முடிகின்றதா..¡ நம்பித்தான் ஆக வேண்டும். அது தான் உண்மை.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 14.05.2016 அன்று நடைப் பெற்ற
ஐ பி எல் மேட்ச்சில், ஆர் சி பி அணி எதிரணி குஜராத் லயன்ஸ் அணியை புரட்டிப் போட்டு மகத்தான சாதனை படைத்தனர்.

இந்த ஐ பி எல் மேட்சில் தான் இரண்டு வீரர்கள் முதல் முதலாக சதங்கள் பதிவு செய்து சரித்திரம் படைத்தனர். குஜராத் லயன்ஸ் அணி டாஸ் வெற்றி பெற்று ஏன் ஆர் சி பி அணியை முதலிலபேட்டிங் ஆட சொன்னோம் என்று வருந்தினர். 3.5 ஓவரில் 19 ரன்கள் ஸ்கோர் இருக்கும் பொழுது , ஆர் சி பி அணியின் ஒப்பனிங் வீரர் கிறிஸ் கெயில் 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
குஜராத் அணி வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். பிறகு கண்களுக்கு எட்டிய தூரம் வரையில், அடுத்த விக்கெட் விழுகிற மாதிரியே தெரியவில்லை. ஓவர்கள் முடிந்துக் கொண்டேயிருந்தன. ரன்கள் கூடிக் கொண்டே இருந்தன. அடுத்த விக்கெட் 16 ஓவர்கள் கடந்து தான் விழுந்தது. 19.5 ல், விராட் கோலி அவுட் ஆனார். அடுத்த பந்து ( 20 வது ஓவர் முடிவு பந்தில் ) வாட்சன் அவுட். ஆர் சி பி அணி ஸ்கோர் 248 / 3
விராட் கோலி 109 ( 55 பந்துக்கள். 5 x 4 & 8 x 6 )
ஏ பி டி வில்லீயர்ஸ் 129* ( 52 பந்துக்கள்.
10 x 4 & 12 x 6 )
குஜராத் லயன்ஸ் அணி பவுலிங்
பிரவீன் குமார் 2 / 45
தவால் குல்கர்னி 1 / 33
7 வீரர்கள் பவுலிங்
வீசீனார்கள்.
கோலி, வில்லீயர்ஸ் ஜோடி பார்ட்னர்ஷிப் 229 ரன்கள்.
கோலி
பவுண்டரிகள்
மிட் ஆப்,
பாயிண்ட், கவர்ஸ்,கவர்,கவர்
சிக்சர்கள்
லாங் ஆன், கவர், கவர், லாங் லெக்,
நேராக அடிக்கப்பட்டது, கவர்,நேராக அடிக்கப் பட்டது ,ஸ்கோயர் லெக்
வில்லீயர்ஸ்
பவுண்டரிகள்
பாயிண்ட், லாங் ஆன், மிட் ஆப், கவர், மிட் விக்கெட், பாயிண்ட், கவர், பாயிண்ட், லாங் ஆன், கவர்
சிக்சர்கள்
கவர்ஸ், பைன் லெக், மிட் விக்கெட், மிட் விக்கெட், லாங் ஆன், பைன் லெக், மிட் விக்கெட், மிட் விக்கெட், கவர், லாங்
ஆன், கவர், லாங் ஆன்
20 ஓவர்கள் முடிவில், குஜராத் லயன்ஸ் அணி
வீரர்கள் சோர்வடைந்து விட்டனர்.
249 ரன்கள் இலக்கை விரட்டி பிடிக்க களம் இறங்கினர், குஜராத் லயன்ஸ் அணி வீரர்கள்.துவக்கமே சரியில்லை. 1.5 ஓவரில், முதல் விக்கெட்டை இழந்தனர், குஜராத் அணி. தொடர்ந்து இடை வெளிகளில் விக்கெட்டுக்கள் சென்ற வண்ணம் இருந்தன. ஆரோன் பிரெஞ்சு அதிகமான 37 ரன்கள் குவித்தார்.
ரவீந்திரா ஜடேஜா எடுத்தது 21. கேப்டன் பிரேண்டன் மெக்குல்லம் எடுத்தது 11. இவர்கள் மூவரைத் தவிர மற்ற எல்லா வீரர்களும் எடுத்தது ஒற்றைப்பட எண் ரன்கள். இரண்டே இரண்டு சிக்ஸர்கள். 9 பவுண்டரிகள். குஜராத் அணி ஆல் அவுட் ரன்கள் 104.
ஆர் சி பி அணியில் 9 வீரர்கள் பவுலிங் செய்தனர்.
ஆர் சி பி பவுலிங்
கிறிஸ் ஜோர்டோன் 4 / 11
சஹல் 3 /19
அரவிந் 1 / 15
ஏ பி டி வில்லீயர்ஸ் ஆட்ட. நாயகராக தேர்வு செய்யப் பட்டார்.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications