Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎலில் எதிரொலித்த வாத்தி கம்மிங், கேஜிஎஃப்.. விண்ணை பிளந்த ரசிகர்களின் குரல்.. வெறித்தன நடனம்

அகமதாபாத்: ஐபிஎல் நிறைவு விழா கோலாகலமாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சூறாவளியின் நடனம், கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப் படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் திரைப்பட பாடல்கள் இடம்பெற, ரசிகர்கள் துள்ளி குதித்தனர்.

யார் ரன்வீர் சிங்?

யார் ரன்வீர் சிங்?

கல்லி பாய், பத்மாவதி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரன்வீர் சிங். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை திருமணம் செய்து கொண்டார். நம் தமிழ் சினிமாவில நமது விஜய், சிம்பு எப்படி நடனமாடுவார்களோ, அதே போல் துள்ளல் நடனத்தை ஆடுவதில் ரன்வீர் சிங் வல்லவர்.

கேஜிஎஃப் நடனம்

கேஜிஎஃப் நடனம்

சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த கேஜிஎப் திரைப்படத்தின் வசன காட்சியை ரன்வீர் சிங் நடித்து காட்ட அரங்கமே அதிர்ந்தது. வைலன்ஸ்.. வைலன்ஸ்.. ஐ டோன்ட் லைக் இட் என்ற வசனத்தை பேசிய ரன்வீர் சிங், பின்னர் டுஃபான் பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடினார்.

வாத்தி கம்மிங் பாடல்

வாத்தி கம்மிங் பாடல்

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடித்து, கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ரன்வீர் சிங் விஜய்யின் ஸ்டப்பை போட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தமிழ் பாடலை இந்த நிகழ்ச்சியில் கொஞ்சமும் எதிர்பார்க்காத ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதனை டிரெண்ட் செய்தனர்.

நாட்டு குத்து பாடல்

நாட்டு குத்து பாடல்

அதன் பிறகு, ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுகுத்து பாடலுக்கு ரன்வீர் சிங் நடனமாடினார். என்டிஆர், ராம் சரண் போட்ட அதே பிரபல ஸ்டப்பை ரன்வீர் சிங் போட்டார். எப்போதும் இது போன்ற நிகழ்ச்சியில் பாலிவுட் பாடல்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய நிலையில், முதல் முறையாக தென்னிந்திய பாடல்கள் ஆதிக்கம் செலுத்தின.

Story first published: Sunday, May 29, 2022, 21:05 [IST]
Other articles published on May 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+