Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - CSK க்கு கடும் சவால் அளிக்கும் ராஜஸ்தான்.. சமாளிக்குமா தோனி படை. 3 ஆபத்து காத்திருக்கிறது

சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய 17வது லீக் ஆட்டத்தில் 4 முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2008ஆம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டி தோனி படைக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 26 முறை மோதியுள்ளன. இதில் சென்ன அணி 15 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வென்றுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு சீசனிலிருந்து கணக்கில் எடுத்து கொண்டால் ராஜஸ்தான் அணியின் கையே ஓங்கி இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற 5 லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் 4 முறையும், சிஎஸ்கே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது.

csk vs rr

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்தவீச்சாளரான அஸ்வின், தற்போது ராஜஸ்தான் அணியில் இருக்கிறார். இதே போன்று லெக் ஸ்பின்னர் சாலும் எதிரணியில் இருக்கிறார். இந்த கூட்டணியை எதிர்கொள்வது மிகவும் கடினமாகும்.

இதே போன்று டிரெண்ட் பவுல்ட்டும் நல்ல பார்மில் பந்துவீசுகிறார். இவரை எதிர்கொள்வது சிஎஸ்கே தொடக்க வீரர்களுக்கு பெரிய ஆபத்தாகும். காரணம் கடைசியாக 19 இன்னிங்சில் 11 முறை இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் ஓவரில் தான் ருதுராஜ் ஆட்டமிழந்துள்ளார். இதே போன்று சஞ்சு சாம்சன், பட்லர், ஜெய்ஷ்வால் ஆகியோரை சிஎஸ்கே சமாளிக்க பெரிய சிக்கல் இருக்கும்.

சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் ராஜஸ்தான் வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரஹானே ஆகியோர் இன்றைய அட்டத்தில் விளையாடுவார்களா என்பது சந்தகேமே. மேலும் இலங்கை வீரர் தீக்சனா சென்னை வந்தள்ளதால் அவர் யாருக்கு பதில் பங்கேற்பார் என்றும் தெரியாது. இன்று மட்டும் ராஜஸ்தானை சிஎஸ்கே வீழ்த்திவிட்டால், அது சென்னை அணியின் உத்வேகத்தை பலமடங்கும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி 2வது இடத்திற்கு செல்லும்.

Story first published: Wednesday, April 12, 2023, 0:32 [IST]
Other articles published on Apr 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+