Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - இன்று ஐதராபாத்தை எதிர்கொள்ளும் சிஎஸ்கே.. பிளேயிங் லெவனில் வரும் பென் ஸ்டோக்ஸ்? யாருக்கு பதில்

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை இரு அணிகளும் 18 முறை மோதி இருக்கிறார்கள்.

இதில் சென்னை அணி 13 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து முறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி நான்கு முறையும் ஹைதராபாத் ஒரு முறையும் வென்றிருக்கிறது.

IPL - CSK is going to Play against mighty srh at chepauk today

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்ற எட்டு புள்ளிகள் பெற்று விடும். இதுவே மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் இரண்டாவது இடத்திற்கு செல்ல கூட வாய்ப்பு இருக்கிறது. சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனி பங்கேற்பாரா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி செய்யும் போது கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

இதனால் தோனி குறித்து சந்தேகம் நிலவியது. அதனை உடைக்கும் வகையில் தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யும் வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. இதேபோன்று காயம் காரணமாக ஒரு வாரமாக விளையாடாத பென் ஸ்டோக்ஸ் நாளைய ஆட்டத்தில் திரும்ப இருக்கிறார்.

ஆனால் அவருக்கு பதில் யாரை நீக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கான்வே, மோயின் அலி, தீக்சனா, பதிரத்னா ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால் ஸ்டோக்ஸ் அணிக்குள் கொண்டு வருவது இயலாத காரியமாக இருக்கிறது. ஐதராபாத் அணியை பொருத்தவரை எய்டன் மார்க்கரம், ஹாரி புருக், ராகுல் திருபாதி போன்ற திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.

இருப்பினும் ஐதராபாத் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டு ஆட்டங்களில் வென்று இருக்கிறார்கள். இதனால் நாளைய ஆட்டத்தில் வென்று புள்ளி பட்டியலில் முன்னேறும் முனைப்புடன் அந்த அணி இருக்கிறார்கள் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் கடந்த இரண்டு போட்டிகளாக 50 ரன்கள் கொடுத்து வருகிறார். இதனால் இன்று சென்னையில் விளையாடும் போது பழைய பார்மை மீட்பாரா என்னும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதால் மாற்றம் இருக்காது என கருதப்படுகிறது.

Story first published: Friday, April 21, 2023, 0:02 [IST]
Other articles published on Apr 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+