வீட்டில விசேஷமா?... தேதியை குறிக்கும் முன் இதையும் பார்த்துக்கோங்க…
Recommended Video

ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு... முதல் போட்டியிலேயே சென்னை களம் இறங்குகிறது | Oneindia Tamil
சென்னை: வரும் ஏப்ரல், மே மாதத்தில் உங்கள் வீட்டில் ஏதேனும் விசேஷ நிகழ்ச்சிக்கு தயாராகிறீர்களா? அந்த நிகழ்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் வர வேண்டும் என்றால், அதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த தேதிகளில் விளையாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன், வரும் ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. தடையால் கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்குகிறது. அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் திரும்புகிறது.

மஞ்சள் உடையுடன் மீண்டும் களமிறங்கும் கேப்டன் கூல் டோணி, மொத்தம் 14 போட்டிகளில் விளையாட உள்ளது. உங்கள் வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் நாட்களை தெரிந்து கொண்டு திட்டமிடுங்கள்.
உங்களுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள நாட்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. ஏதோ எங்களால் முடிந்த சிறு உதவி.
ஏப். 7 – மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பை
ஏப். 10 – கோல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
ஏப். 15 – கிங்ஸ் லெவன் பஞ்சாப், இந்தூர்
ஏப். 20 – ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
ஏப். 22 – சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஐதராபாத்
ஏப். 25 – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு
ஏப். 28 – மும்பை இந்தியன்ஸ், சென்னை
ஏப். 30 – டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை
மே 3 – கோல்கத்தா நைட் ரைடர்ஸ், கோல்கத்தா
மே 5 – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை
மே 11 – ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்ப்பூர்
மே 13 – சன்ரைடர்ஸ் ஐதராபாத், சென்னை
மே 18 – டெல்லி டேர்டெவில்ஸ், டெல்லி
மே 20 – கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை
Story first published: Thursday, February 15, 2018, 11:38 [IST]
Other articles published on Feb 15, 2018


Click it and Unblock the Notifications