சென்னை : ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், மறக்க முடியாத ஐபிஎல் போட்டிகள் குறித்து பார்த்து வருகிறோம். அதன் அடிப்படையில், சி எஸ் கே டீம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.முரளி விஜயும், மாத்யு ஹய்டேன் துவக்கினர் பேட்டிங்கை.
முதல் மூன்று ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 13 , அதாவது முதல் 3 ஓவரில் முறையே 4 , 2 , 7
மாத்யு ஹய்டேன் 8, முரளி விஜய் 5 , மூன்றாவது ஓவரில் ஹர்பஜன் போட்ட பந்தை லாங் ஆனில் 6 அடித்தார், ஹய்டேன். 5 வது ஓவர் முடிவில் சி எஸ் கே டீம் ஸ்கோர் 29

மாத்யு ஹய்டேன் 12
முரளி விஜய் 17
கான் ஓவரில் விஜய் டீப் மிட் விக்கெட்டில் அடித்தார் ஒரு 6.மலிங்கா ஓவரில் இரண்டு 4 ரன்கள். விஜய் அடித்தது அருமையான எக்ஸ்ட்ரா கவர் டிரைவ்.ஹய்டேன் கவர், பாயிண்ட்க்கு இடையே பந்தை செலுத்தி ரசிகர்களை மகிழ வைத்தார்.
சில LBW அப்பீல்கள் விக்கெட்டுக்களை பெற்று தரவில்லை.
6 வது ஓவரில் 11 ரன்கள், ஒரு சிக்ஸர் உட்பட
8 வது ஓவரின் இரண்டாவது பந்தில் விக்கெட் எடுத்தார் பெர்னாண்டோ. விஜய் அடித்த பந்தைப் பிடித்தது திவாரி.
26 ( 19 பந்துக்கள். 1 X 4 & 2 x 6)
9 வது ஓவரில் அடுத்த விக்கெட். ஹய்டேன் அவுட். கேட்ச் பிடித்தது ராயடு. பவுலர் பொல்லார்ட்.
17 ( 31 பந்துக்கள். 1 X 4 & 1 x 6)
9 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 49 / 2
சி எஸ் கே டீம் எடுத்தது இந்த கட்டத்தில் ஓவருக்கு 5. 5 ரன்களை எட்ட வில்லை.
சி எஸ் கே டீம் ரன்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
ரெய்னாவும், எஸ் பத்ரிநாத்தும் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
10 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 58 / 2.
ரெய்னா 5
எஸ் பத்ரிநாத் 7
அடுத்த பொல்லார்ட் ஓவரில் பவுண்டரி. அடித்தவர் பத்ரிநாத்.
12 வது ஓவரில் எடுக்கப் பட்டது 1 ரன். ஒரு விக்கெட் விழுந்தது.பவுலர்
பெர்னாண்டோ.அவுட்
பத்ரிநாத். மலிங்கா பைன் கெக்கில் கேட்ச் பிடித்தார்.
14 ( 11 பந்துக்கள். 2 X 4 & 0 x 6)
அந்த ஓவர் முடிவில் ஸ்கோர் 68 / 4
ரெய்னா 7
தோனி 1
13 வது ஓவரில் 12 ரன்கள் கிட்டின. தோனி ஓவரின் துவக்க பந்தில் மிட் விக்கெட் பகுதியில் தூக்கி அடிக்க பந்து ரசிகர்கள் மத்தியில் போய் விழுந்தது, 6.
ஓவரின் முடிவு பந்து பாயிண்ட் பகுதியில் வேகமாக சென்று பெற்றுத் தந்த ரன்கள் 4.14 வது ஒவரில் 11 ரன்கள், தோனி அடித்த ஒரு பவுண்டரி உட்பட.15 வது ஓவர். ரன்கள் 17.
பவுலர் கான். ஒரு 6. ஒரு 4. பேட்ஸ்மன் ரெய்னா.
16 வது ஒவர். பொல்லார்ட் வீசிய பந்தில் கேட்ச் பிடிக்க தவறியவர் சாஹீர் கான். அந்த பந்தில் ரெய்னாவிற்கு கிடைத்து ரன்கள் 2. இந்த ஓவரில் கிடைத்த மொத்த ரன்கள் 19, ரெய்னா அடித்த 2 சிக்ஸர்கள் உட்பட. ஒரு சிக்ஸ் டீப் எக்ஸ்ட்ரா கவர் மேல் சென்றது.
அடுத்த சிக்ஸ் லாங் ஆன் பகுதிக்கு விசிட் செய்தது.
17 வது ஓவர். 12 ரன்கள். ரெய்னா 2 பவுண்டரிகள் எடுத்தார். ஸ்கோர் 139 / 3
தோனி 22
ரெய்னா 54
18 வது ஓவர். கான் பவுலர். 7 ரன்கள். முதல் பந்தில் பெர்னாண்டோ கேட்ச் பிடிக்க அவுட் ஆனது தோனி.
22 ( 15 பந்துக்கள். 2 x 4 & 1 x 6 )
மோர்கெல் ஒரு பவுண்டரி அடித்தார்.
ஸ்கோர் 146 / 4
மோர்கெல் 5
ரெய்னா 56
சி எஸ் கே டீம் வீரர்களிடம் இருந்து எதிர் பார்த்த ரன்கள் வரவில்லை.
19 வந்து ஓவரில் மோர்கெல் லாங் ஆன் திக்கில் அடித்த அடி 6.
ஹர்பஜன் இந்த ஓவரில் கொடுத்தது ரன்கள் 11.
ஸ்கோர் 157 /4
ரெய்னா 57
மோர்கெல் 15
மலிங்கா 20 வது கடைசி ஓவரை எதிர் பார்த்தபடி போட்டார்.
11 ரன்கள். 1 விக்கெட்.
மோர்கெல் ரன் அவுட்.
15 ( 6 பந்துக்கள். 1 x 4 &
1 x 6 )
அனிருதா ஒரு பவுண்டரி அடித்தார்.
20 ஓவர்கள் முடிவில் சி எஸ் கே டீம் ஸ்கோர் 168 / 5
ரெய்னா 57*
அனிருதா 6*
ரெய்னா மட்டும் 50 ரன்களுக்கு அதிகமாக எடுத்தார்.
57* (35 பந்துக்கள். 3 x 4 & 3 x 6 )
விக்கெட்டுக்கள் எடுத்த பவுலர்கள்
சாஹீர் கான் 1 / 34
பெர்னாண்டோ 2 / 23
பொல்லார்ட் 1 / 45
சி எஸ் கே டீம் 180 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து இருந்தால், மும்பை இந்தியன்ஸ் டீமிற்கு அழுத்தம் கொடுத்து இருக்கும்.அவர்கள் டீமில் ஷிகார் தவான், சச்சின் டெண்டுல்கர், அம்பாத்தி ராயுடு, அபிஷேக் நாயர் போன்ற வீரர்கள் இருந்தனர். அந்த அணிக்கு எவ்வளவு ரன்கள் தேவை வெற்றி பெற என்று முன் கூட்டியே தெரிந்து இருந்தது கூடுதல் சலுகை.
மும்பை இந்தியன்ஸ் டீம் டெண்டுல்கர், தவான் ஜோடி துவக்க வீரர்களாக களம் காண ஆட்டம் துவங்கியது.அஸ்வின், போலிங்கர் பந்து வீச்சை துவங்கினார்கள்.
அஸ்வின் வீசிய முதல் ஓவரை எதிர் கொண்டது தவான். ஆறு டாட் பந்துக்கள். மெய்டன் ஓவர். முதல் ஓவர் முடிவில் ஸ்கோர் 0
தவான் 0
டெண்டுல்கர் 0
இரண்டாவது ஓவரின் 4 வது பந்தில் தவான் கேட்ச் கொடுத்தார். பிடித்தது தோனி.
விக்கெட் எடுத்தது போலிங்கர்.

ஸ்கோர் 3 / 1
நான்காவது ஓவர் முடிவில் ஸ்கோர் 11 / 1
டெண்டுல்கர் 8
நாயர் 2
5 வது ஓவர் போட்டது அஸ்வின். ரன்கள் 10.
டெண்டுல்கர், நாயர் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.
5 வது ஓவர் ஸ்கோர் 21 / 1
டெண்டுல்கர் 13
நாயர் 7
7 வது ஓவரில் நாயர் காலில் பட்டு பந்து பவுண்டரி எல்லையை கடந்தது. 4 லெக் பை ரன்கள்.
ஸ்கோர் 38 / 1.
டெண்டுல்கர் 24
நாயர் 8
மோர்கெல், முரளீதரன் பவுலிங் செய்தனர்.
அவ்வளவாக ரன்கள் எடுக்க முடியவில்லை.
ஸ்கோர் 43 / 1
10 வது ஓவர் பவுலிங் செய்தது ஜக்காட்டி. 15 ரன்கள். நாயர் அடுத்து அடுத்த பந்துக்களை சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். ஒன்று வைட் லாங் ஆன் , அடுத்து நேராக சென்று விழுந்தது.
ஸ்கோர் 58 /1
டெண்டுல்கர் 27
நாயர் 24
எதிர் பார்க்காத விதமாக ஒரே ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்தது மும்பை இந்தியன்ஸ் டீம், 12 வது ஓவரில் 6 ரன்கள். 2 விக்கெட்டுக்கள்.
ரெய்னா வீசினார். நாயர் அடித்து விட்டு ஓடி வர, டெண்டுல்கர் திருப்பி அனுப்பினார். ரன் அவுட் ஆனது நாயர்.
எதிர் பாராமல் ஹர்பஜன் சிங் பேட்டிங் விளையாட வந்தார்.
ரெய்னாவின் பந்து ஒன்றை மிக அழகாக பவுண்டரி எல்லைக் கோட்டை தாண்டி அனுப்பினார், லேட் கட் முறையை பின் பற்றி, டெண்டுல்கர்.
கடைசி பந்தில் LBW முறையில் ஹர்பஜன் சிங் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
ஸ்கோர் 73 / 3
டெண்டுல்கர் 37
ஜக்காட்டி, ரெய்னா ஓவர்கள் வீசினார்கள்.
15 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 101 / 5
ராயுடு 14
டுமினி 0
பவுலர் ஜக்காட்டி. 2 விக்கெட்டுக்கள். 6 ரன்கள். முதலில் அவுட் ஆனவர் சச்சின் டெண்டுல்கர். லாங் ஆப் திக்கில் அடிக்க எல்லை கோட்டு அருகில் நின்று கொண்டிருந்த முரளி விஜய் கேட்ச் பிடித்தார்.
48 (45 பந்துக்கள். 7 x 4 )
திவாரி அடித்த பந்தை பிடித்தது ரெய்னா.
அஸ்வின் வீசிய ஓவரில் 8 ரன்கள்.
முரளீதரன் போட்ட ஓவரின் கடைசி பந்தில் டுமினி அவுட். கேட்ச் பிடித்தது ஜக்காட்டி.
ஒரு நல்ல கேட்சை பிடித்தார்.
6 ( 7 பந்துக்கள்)
ஸ்கோர் 124 / 6
ராயுடு 20
போலிங்கர் போட்ட அடுத்த ஓவர் ரன்கள் மழை கண்டது. 22 ரன்கள். இரண்டு 4. இரண்டு 6. பொல்லார்ட் இந்த ஓவரில் பொளந்து கட்டினார். முதல் 6 பந்து ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் போய் விழந்தது. ஆரவாரம் விண்ணை துளைத்தது.
அடுத்த 6 மிட் விக்கெட் பகுதியில் ரசிகர்கள் மத்தியில் தஞ்சம் புகுந்தது.
இது வரையில் மேட்ச்
சி எஸ் கே டீமிற்கு சாதகமாக சென்று கொண்டிருந்தது, பொல்லார்ட் இந்த ஓவரின் அட்டகாச ஆட்டத்திற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் டீமிற்கு நம்பிக்கை அளித்தது.
எதிர் பார்ப்பு கூடியது.
ஸ்கோர் 136 / 6
ராயுடு 20
பொல்லார்ட் 22
19 வது ஓவர் போட்டது
மோர்கெல்.
பொல்லார்ட் ஒரு பவுண்டரி அடித்தார்.
ஆனால் கடைசி இரண்டு பந்துக்கள் மும்பை இந்தியன்ஸ் டீம்மை புரட்டிப் போட்டது. ஆம். இரண்டு விக்கெடுக்களை இழந்தனர்.
5 வது பந்தில் பொல்லார்ட் அடித்து விட்டு ஓடி, இரண்டாவது ரன் ஓட, இரண்டு வீரர்களும் ஒரே முனையில் நின்றனர். விஜய் வீசிய பந்தை தோனி ஸ்டம்பில் தட்டினார். டீமின் நலன் கருதி ராயுடு வெளியேறினார். அவர் ரன் அவுட். 21 ( 14 பந்துக்கள். 1 x 4 & 1 x 6 )
அடுத்த பந்தில் பொல்லார்ட் கேட்சை பிடித்தது ஹய்டேன்.
27 ( 10 பந்துக்கள். 3 x 4. & 2 x 6 )
19 வது ஓவர். ஸ்கோர். 142 / 8
கடைசி 20 தாவது ஓவர் வீசியது போலிங்கர்.
மூன்றாவது பந்தில் கான் ரன் அவுட்.
20 வது ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் டீம் ஸ்கோர் 146 / 9
பெர்னாண்டோ 2*
மலிங்கா 1*
விக்கெட் எடுத்தவர்கள்
போலிங்கர் 1 / 31
மோர்கெல். 1 / 20
முரளீதரன் . 1 / 17
ஜக்காட்டி 2 / 26
ரெய்னா 1 / 21
டெண்டுல்கர், நாயர், ராயுடு, பொல்லார்ட் சிறந்த பேட்டிங் செய்தனர்.
இருந்தும் மும்பை இந்தியன்ஸ் டீம்மால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.
அதிக ஸ்கோர் இல்லாவிட்டாலும் கடைசி வரையில் மேட்ச் திரில்லிங்காக நடந்தது.
சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.இந்த மேட்சிற்கு ரெபெரி யாக இருந்தவர் எஸ் வெங்கடராகவன்.முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் 22 ரன்கள் வித்தியாசத்தில் ஐ பி எல் கோப்பையை வென்றது.
வாசுதேவன், பெங்களூரு